அதிமுக ஆட்சியில் தமிழக மக்கள் விரும்பவில்லை எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஆட்சி அமைப்பதற்காக மக்கள் தயாராகி வருவதாகவும் திமுக எம்பி கனிமொழி தெரிவித்திருக்கின்றார்.
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் பிரச்சாரப் பயணம் செய்து வரும் கனிமொழி இன்று அந்தியூர் வாரச்சந்தையில் பொதுமக்களையும் வியாபாரிகளையும் சந்தித்து பேசி இருக்கின்றார் அந்தியூர் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் முறையீடு செய்து இருக்கிறார்கள் அதனை பணிவுடன் கேட்டுக்கொண்ட அவர் இதே இடத்தில் தொடர்ந்து நடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி இப்போதைய அதிமுகவின் ஆட்சி பொது மக்கள் விரும்பாத ஒரு ஆட்சியாக இருக்கின்றது எனவும் ஆட்சியை கலைத்துவிட்டு திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஆட்சி அமைக்க மக்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்தார் அதோடு பொதுமக்களுடைய எதிர்பார்ப்பை எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நல்ல திட்டங்களை செயல்படுத்துவதற்கு திமுக அரசு காத்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார் அதோடு இங்கே சுகாதாரம் கேள்விக்குறியாக இருக்கின்றது என்று குற்றம் சாட்டிய அவர் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக தமிழக அரசு விரைந்து செயலாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.