கமல் எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள்!

0
188

எதிர்வரும் சட்டசபைத் தேர்தலின்போது ரஜினிகாந்த் ஆதரவு கேட்பேன் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்திருக்கின்றார்.

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளராக இருந்த சந்தோஷ் பாபு ஐஏஎஸ் சமயத்தில் தன்னுடைய பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார் இந்த நிலையில் இன்று அவர் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் இதன் பிறகு அந்த கட்சியின் தலைவர் கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்தபோது ரஜினி நேற்று நடத்திய கூட்டம் குறித்தும் அவரிடம் ஆதரவு கேட்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் தெரிவித்த கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யும் போது நான் அனைவருடைய வீட்டிற்கு செல்வதாக இருக்கின்றேன் என்னுடைய நண்பன் வீட்டை விட்டு விடுவேனா அவருடைய ஆரோக்கியத்தில் அரசியலை விட எனக்கு அதிக அக்கறையும் ஆர்வமும் இருக்கின்றது. என்னை பொறுத்தவரையில் என்னுடைய என்னுடைய தொழிலைவிட அரசியலில் தான் ஆர்வம் அதிகமாக இருக்கிறது அதனால்தான் தொழிலை ஒதுக்கி வைத்துவிட்டு இதை நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் ஆகவே ரஜினி நலமாக இருக்க வேண்டும் என்பதற்கு நான் முன்னுரிமை அளிப்பேன்.

நாங்கள் திரை உலகில் போட்டியாளர்களாக இருந்தோமே ஒழிய பொறாமைக்காரர்களால் இருந்தது கிடையாது அரசியலிலும் அதுவே தொடரும் என்று தனக்கே உரிய பாணியில் பதில் அளித்தார் நடிகர் கமல்ஹாசன் ரஜினி நேற்று நடைபெற்ற மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் புதிய கட்சி ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதை தன் உடல்நிலையை காரணம் காட்டி தெளிவுப்படுத்திய நிலையில் இன்று கமல் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

Previous articleமு.க. அழகிரி வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு!
Next articleஅரசு எடுத்த அதிரடி முடிவால் அதிர்ந்துபோன அன்புமணி ராமதாஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here