சிபிஐ முன்பு பணிந்த துரை தயாநிதி!

0
125

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பபட்ட அந்தக் கட்சியின் முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி அவர்கள் இன்றைய தினம் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி சென்னை சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அழகிரி மத்திய வேதியியல் மற்றும் உரத்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் உரை நிறுவனமான கோத்தாரி குழுமத்திற்கு சலுகைகளை வழங்கி இருப்பதாகவும் அதற்கு பதிலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கின்ற கோத்தாரி கட்டிடத்தை துரை தயாநிதி தன் வசப்படுத்தியதாகவும் சிபிஐக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன இது சம்பந்தமாக தயாநிதிக்கு சிபிஐ விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பி இருப்பதாக நேற்றையதினம் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இன்று துரைதயாநிதி அவர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி இருக்கின்றார் தமிழ் நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அழகிரி பாஜகவில் இணைவதற்கு காத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்தன பாஜகவும் அழகிரி வந்தால் வரவேற்போம் என்று தெரிவித்தது ஆனாலும் நான் பாஜகவில் இணைய இருப்பதாக சிலர் காமெடி செய்து இருக்கின்றார்கள் என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில் இன்று துரைதயாநிதி சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி இருக்கின்றார் இந்த சூழலில் சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய பங்கு இருக்கும் என்று இன்றைய தினம் அழகிரி பேட்டி அளித்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleமுக்கிய நபரை விமர்சனம் செய்த உதயநிதி! கடும் கோபத்தில் மத்திய அரசு!
Next articleஇந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும்! இன்றைய ராசி பலன் 02-12-2020 Today Rasi Palan 02-12-2020