உடல்நலக்குறைவால் பிரச்சாரத்தை நிறுத்துவதா? ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

0
118

சுமார் பத்து வருடங்களாக ஸ்டாலின் லண்டனுக்கு சென்று வந்து கொண்டிருக்கின்றார். அந்தப் பயணம் எது தொடர்பான பயணம் என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பு இல்லை என்றாலும் கூட மருத்துவ சிகிச்சை குறித்த பயணம்தான் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் லண்டன் செல்வதற்கு திட்டமிட்டார் அந்த ஸ்டாலின். கொரோனா பொது முடக்கம் காரணமாக லண்டன் செல்ல இயலவில்லை அவருடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு அதுவும் கை வலி அதிகமாக இருந்த காரணத்தால், அவர் லண்டன் செல்வதுதான் நல்லது என்று அவருடைய மருத்துவ ஆலோசகர் தணிகாசலம் கூறியதாகவும், அதன் காரணமாக தனி விமானம் மூலமாக லண்டன் செல்ல மத்திய அரசிடம் அனுமதி கேட்டதாகவும், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற காரணத்தால், மத்திய அமைச்சர்களுக்கு இணையான தகுதி இருப்பதால் மத்திய அரசும் அதற்கு அனுமதி வழங்கி இருப்பதாகவும், செய்திகள் வெளியான நிலையில், அந்த விஷயத்தை திமுக திட்டவட்டமாக மறுத்தது.

தனி விமானம் ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்தாலும் கூட, நோய்த்தொற்றின் தாக்கம் இருப்பதால் , தற்போது லண்டனுக்கு செல்வது சரி கிடையாது என்ற மருத்துவரின் ஆலோசனையின்படி தான் ஸ்டாலின் அந்த பயணத்தை ரத்து செய்து இருக்கின்றார்.

மோசமான கை வலி இருந்திருக்கின்றது தொடர்ச்சியான சிகிச்சை மற்றும் வீட்டிலேயே உடற்பயிற்சி கூடம் வைத்து பயிற்சி மேற்கொண்டதாலும் அந்த கைவலி குறைந்து இருக்கின்றது .அதோடு லண்டன் செல்ல இயலாததால் நாள்தோறும் நான்கு மணி நேரம் பயிற்சி செய்து தன்னுடைய உடல் நலனை சீராக்கி இருக்கின்றார் ஸ்டாலின். ஆனாலும்கூட வெளி பயணங்களை குறைத்துவிட்டு வீட்டிலேயே இருந்து காணொளி மூலமாகவே கட்சிப் பணிகளை செய்து வந்தார்.

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரச்சாரத்தை உதயநிதி, கனிமொழி, போன்றவர்கள் நடத்தி வரும் நேரத்தில் ஸ்டாலின் தீவிரப் பிரச்சாரத்தில் ஆரம்பிக்க இருந்த நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கின்றது.

புயல் மழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிக்கொண்டிருந்த ஸ்டாலின் அவர்களுக்கு மயக்கமும் இடுப்பு வலியும் ஏற்பட்டு இருக்கின்றது. அதன் காரணமாக திடீரென்று அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றுவிட்டார் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் வந்து நிவாரண உதவிகள் வழங்குவதில் பங்குபெற்ற ஸ்டாலின் நான் நலமுடன் இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

ஆனாலும் கூட அவருடைய மருத்துவ ஆலோசக மருத்துவர் தணிகாசலம் ஸ்டாலினுடைய உடல் நலத்தில் சந்தேகமடைந்து ஸ்டாலின் அவர்களை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வரவழைத்து பரிசோதனைகள் செய்ததில் பிரச்சனை எதுவும் கிடையாது என்று தெரிய வந்திருக்கின்றது .

இருந்தாலும் இடுப்புவலி, கைவலி, போன்றவைகளால் அவஸ்தை படும் காரணத்தால், தேர்தல் சமயத்தில் பிரச்சாரம் செய்ய இயலாமல் போய்விடுமோ என்ற பயத்தில் சிகிச்சைக்காக லண்டன் செல்வது தான் சரி என்று முடிவெடுத்து இருப்பதாகவும், அதற்காக அவர் தனி விமானம் மூலமாக லண்டன் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleஅடடே அங்கேயா இவர் போட்டியிடப் போகிறார்! ஷாக் ஆன அதிமுக திமுக!
Next articleஇந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 12-12-2020 Today Rasi Palan 12-12-2020