வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு! அடுத்த கட்ட போராட்டத்தில் பாமக!

0
113

அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்து இன்றைய தினம் தமிழ்நாட்டில் இருக்கின்ற 12622 கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம பொதுமக்கள் மனு கொடுக்கும் மாபெரும் போராட்டத்தை நடத்த இருக்கின்றது பாட்டாளி மக்கள் கட்சி.

வேலைவாய்ப்பு, மற்றும் கல்வியில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்து தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி சென்னையில் டிசம்பர் மாதம் நான்காம் தேதி டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்த முயற்சி செய்தது இதனுடைய அடுத்த கட்டமாக இன்று கிராம நிர்வாக அலுவலக முற்றுகை மற்றும் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்த இருக்கின்றது பாட்டாளி மக்கள்.

இந்த நிலையில், போராட்டம் நடத்தாமல் நம்முடைய உரிமையை பெற்றோம் என்ற வரலாறு கிடையாது. தனி ஒருவருடைய உரிமைதான் வாழ்க்கையை உயர்த்தும் போராட்டம் என்பது விடியலை கொடுக்கும். தட்டினால் , கேட்டால், அழுதால், கிடைக்கும் தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும், உயர்த்த களம் இறங்கி போராடி உரிமையை வாங்கி மேம்படு என்று பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு ஊக்கம் கொடுத்திருக்கின்றார் பாமகவின் தலைவர் ஜி.கே. மணி.

Previous articleதலைவி படம் தேர்தல் சமயத்தில் வெளியீடு? பரபரப்பு தகவல்!
Next articleமுதல்வரும் துணை முதல்வரும் முக்கிய ஆலோசனை! பரபரப்பானது தமிழக அரசியல்!