தமிழக சட்டசபை தேர்தல் 2021 ஆம் வருடம் நடைபெற இருக்கின்ற நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் கட்சி தொடர்பான விவரங்களை டிசம்பர் மாத இறுதியில் தெரிவிப்பதாக சொல்லியிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருக்கின்ற கட்சி உடைய பெயர் மக்கள் சேவை கட்சி எனவும், அந்தப் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாகவும், தகவல்கள் வெளியாக தொடங்கினர். அதுமட்டுமின்றி ரஜினிகாந்தின் மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருப்பதாகவும் தகவல்கள், பரவத் தொடங்கின.
ரஜினிகாந்த் சார்பாக பாபா சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும், ஆனாலும் தேர்தல் ஆணையம் அதற்கு இசைவு அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து கட்சியின் பெயர் தொடர்பாக தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும், என்று ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது.
இதன் காரணமாக, கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான உண்மை தகவல் என்ன என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வரும்வரை காத்திருக்கலாம், என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், மற்றும் அவருடைய ரசிகர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.