எம்ஜிஆரின் வாரிசுதான் நான் என்று மறுபடியும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கின்றார். நடிப்பிலிருந்து அரசியலுக்கு பயணமாகும் பலரும் தங்களை எம்ஜிஆர் உடைய வாரிசுகள் என்று தான் அழைத்து வருகிறார்கள். எம்ஜிஆரின் கலையுலக வாரிசு என்று தெரிவித்து அரசியலில் நுழைந்த நடிகர் பாக்கியராஜ் அரசியலில் இருந்து ஒதுங்கி கொண்டார். விஜயகாந்த்தை அவருடைய கட்சியினர் மற்றும் தொண்டர்கள் ஆகியோர், கருப்பு எம்ஜிஆர் என்று அழைக்கிறார்கள். தற்பொழுது நடிகர் கமல்ஹாசனும், ரஜினியும், எம்ஜிஆரை பற்றி தான் பேசி வருகிறார்கள்.
ஆனாலும் மக்கள் மட்டுமே எம்ஜிஆர் உடைய வாரிசுகள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். அவரோடு எம்ஜிஆரின் நீட்சி சொல்லிக்கொள்ளும் கமலும், ரஜினியும், அதிமுகவில் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வமான நாளேடான நமது அம்மாவில் விமர்சனம் எழுப்பப்பட்டிருந்த நிலையிலே, சென்னை அருகே போரூர், பூந்தமல்லி, போன்ற பகுதிகளில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தின் போது உரையாற்றிய கமல்ஹாசன், தேர்தல் வந்துவிட்டால் எம்ஜிஆரை கொண்டாடுவதாக ஒருசிலர் தெரிவிக்கிறார்கள். அப்படியானால், இத்தனை தினங்களாக அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள் போல, எங்களுடைய முதல் முழக்கமே நாளை நமதே. எம்ஜிஆர் மக்கள் திலகம் என்ற காரணத்தால், அவரைப்பற்றி யார் வேண்டுமானாலும் அவருடைய வாரிசு என்று தெரிவித்துக் கொள்ளலாம். நல்லதை செய்யும் நினைக்கும் அனைவரும் எம்ஜிஆரின் வாரிசு தான் அதன் காரணமாக, நானும் எம்ஜிஆரின் வாரிசுதான் மறுபடியும் சொல்கிறேன் எம்ஜிஆரின் நீழ்ச்சி தான் நான் என்று அதிமுகவினருக்கு விளக்கம் அளித்திருக்கிறார்.