மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்! எதனால் தெரியுமா?

Photo of author

By Sakthi

தமிழ் கடவுள் முருகப் பெருமானை கருப்பர் கூட்டம் இழிவு செய்தது, இந்து பெண்கள் விபச்சாரிகள் என்று திருமாவளவன் பேசியது, திமுக தலைவர் ஸ்டாலின் முத்துராமலிங்க தேவரை அவமானப்படுத்தியது, உதயநிதி ஸ்டாலின் பூர்ண கும்ப மரியாதையை ஏற்க மறுத்தது, என்று பல சம்பவங்கள் இந்துக்களை புண்படுத்தும் வகையில் இருந்தது. தீபாவளிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. என்று உணரும் நிலையில் ஒன்றிணைக்கும் கிறிஸ்மஸ் என்ற நிகழ்வு சென்னை சாந்தோமில் நடந்தது. ஒன்றிணைக்கும் கிறிஸ்மஸ் என்கிற இந்த விழாவில், திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

இந்த நிகழ்வில், திமுக ஆதரவாளரான கலையரசி திருநீறு அணிந்து ஸ்டாலின் முன்னாலே, கிறிஸ்மஸ் விழா மேடையில் உரையாற்றினார். அவர் பேசும்போது, இந்து என்ற மதமே இல்லை, எல்லோரும் சைவர்கள் தான் தமிழர்கள் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், ஆகியோர் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள். இந்து என்ற வார்த்தையை உபயோகப்படுத்துவது நமக்கு பலவீனமாகும். இந்து என்ற வார்த்தையை கேட்டாலே உடம்பெல்லாம் எரிகின்றது என பேசி இந்து மதத்தின் மீது இருக்கின்ற வன்மத்தை காட்டி இருக்கின்றார்.

அந்த சமயத்தில், மேடையில் அமர்ந்திருந்த கிறிஸ்தவ தலைவர்கள் அனைவரும் சிரித்துக்கொண்டே கைதட்டினார்கள். ஸ்டாலினும் அவரின் பேச்சை ரசித்தபடி கேட்டுக்கொண்டிருந்தார். மதநல்லிணக்கத்தை வளர்க்கின்றோம் என்று தெரிவித்துக் கொண்டு, அனைத்து மதத்தினரையும் அழைத்து கிறிஸ்தவர்கள் ஏற்பாடு செய்த கிறிஸ்தவ விழாவில் இந்து மதத்தின் மீது வெறுப்பை உண்டாக்கி இருப்பது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்து மதத்தை பற்றி இழிவாக பேசுவது திமுக தலைவர்களையே கதிகலங்க வைத்து இருக்கின்றது. இந்த நிலையில், மீண்டும் ,மீண்டும், மேடைகளில் இந்துக்களை பற்றி திமுக ஆதரவாளர்கள் பேசி வருவது அந்த கட்சிக்கு மிகப் பெரிய சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.