பிரபல பத்திரிகை செய்த வேலையால் கதறும் ஸ்டாலின்!

0
215

பாஜகவின் அதிகாரபலம் ஒருபுறமும் அதிமுகவின் பணபலம் இன்னொரு புறமும் இருக்க அதோடு அவர்கள் வளைத்து வைத்திருக்கும் பல ஊடகங்கள் ஒரு புறம் என்று திமுக மூன்று முனை தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றது. என நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

அதோடு நாம் புது புது அஸ்த்திரங்களை எதிர்கொண்டு வருகின்றோம் நம்மை அவர்களால் எதிர்கொள்ள இயலாத காரணத்தால், புதிது புதிதாக ஒரு சிலரை உருவாக்கி அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு அரசியலுக்குள் இழுத்திருக்கிறார்கள் என்று ரஜினியை சாடும் விதமாக தெரிவித்திருக்கிறார். இதனால் நாம் சோர்ந்து போகாமல் கடுமையாக உழைக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

நம்மை சார்ந்தவர்களே நம்மை வீழ்த்த நினைப்பாரானால் அது உப்பிட்ட வீட்டிற்கு செய்யும் துரோகம் இப்படிப்பட்டவர்களுக்கு தான் கட்சியின் புற்றுநோய் என்று தலைவர் கருணாநிதி தெரிவித்தார். சொந்த கட்சிக்கு துரோகம் செய்த ஆளுங்கட்சிக்கு அனுசரணையாக இருந்து வருபவர்கள் அதை விடவும் மோசமானவர்கள் என்று தெரிவித்தார் ஸ்டாலின்.

இவ்வாறு இருக்க புலம்பல் என்ற தலைப்பில், தினமலர் பத்திரிகை ஸ்டாலினின் இந்த பேச்சை வெளியிட்டிருக்கிறது இதன் காரணமாக, திமுக மிகப்பெரிய அப்செட்டில் இருந்து வருகின்றது.

பித்தம் தெளிய வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் தின்று விடலாம், என நினைக்கும் கூட்டத்திற்கு ஸ்டாலின் பேசுவது புலம்பலாகத்தான் இருக்கும் ஆகவே வழக்கம்போல நாள்தோறும் வெளியாகும் நாளிதழுக்கு புலம்பலுக்கும், பிரகடனத்திற்கும், வித்தியாசம் என்பது தெரியவில்லை எதிரி யார் என்று தெரிவித்து அவர்களுடைய முகத்திரையை அகற்றி இருக்கின்றார் ஸ்டாலின். அது எவ்வாறு புலம்பல் என சொல்லப்படும் எனவும், அதிமுகவை நிராகரிப்பு என்ற போர் முரசை கொட்டி இருக்கின்றார் ஸ்டாலின் என்றும் தெரிவிக்கிறார்கள்.

இந்த விவகாரமானது அதிமுகவை விடவும் அவில் பொறி சாப்பிடும் கூட்டத்திற்கு தான் மகிழ்ச்சி அதிகமாக இருக்கின்றது என தன்னுடைய கோபத்தை காட்டியிருக்கிறார் ஸ்டாலின் திமுகவின் அதிகாரப்பூர்வமான நாளிதழான முரசொலி பத்திரிக்கையில்.

அதுமட்டுமன்றி, எங்களை இகழவும், பாஜகவிற்கு பல்லக்கு தூக்கவும் அமைக்கப்பட்டிருக்கின்றன பல்லிளிக்கும் பத்திரிக்கை முதலாளிகள் அணியை எங்கள் ஸ்டாலின் தன்னுடைய பேச்சால் அம்பலப்படுத்தி இருக்கிறார் என்ற கோபத்தில் புலம்பல் என தலைப்பு வைத்திருக்கின்றது. அவர்களுடைய அடையாளமே தாமரையாக இருக்கும் பொழுது அவர்கள் இவ்வாறு தானே தலைப்பு வைப்பார்கள் என்று பொங்கி வழிந்து இருக்கின்றது அந்த நாளிதழ்.

Previous articleமின்சார வாரியம் தனியார் மயமாக்க படாது! அமைச்சர் தங்கமணி உறுதி!
Next articleதமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா? தேர்தல் ஆணையம் சூசக தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here