தபால் வாக்குகள் சம்பந்தமான தேர்தல் ஆணையத்தின் முடிவிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர்கட்சியான திமுக வழக்கு தொடர்ந்து இருக்கின்றது.
தேர்தல் நேரத்தில் ராணுவத்தினர், வெளி ,மாநில, மற்றும் வெளி மாவட்டங்களில் பணியாற்றி வரும் காவல்துறையினர், போன்றோர். தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே தபால் ஓட்டு செலுத்துவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருக்கின்றது.
சமீபத்தில் நடந்த பீகார் மாநில சட்டசபை தேர்தலில் தொற்றின் பயம் காரணமாக, 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், போன்றோருக்கு தபால் வாக்குகள் அளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தினால் பல்வேறு முறைகேடுகள் நடக்கும் என்று முன்னரே தேர்தல் ஆணையத்தில் திமுக போன்ற எதிர்க்கட்சிகள் முறையீடு செய்து இருந்தனர்.
ஆனாலும் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 80 வயதிற்கு அதிகமானோர், மற்றும் மாற்றுத்திறனாளிகள், போன்றவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறையை அமல்படுத்த இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கின்றது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கின்றது .
அந்த மனுவில், தபால் வாக்கை பெறுவதற்காக வாக்குச்சாவடி அதிகாரி நேரில் சென்று விண்ணப்பத்தை வாக்காளர்களிடம் கொடுக்க வேண்டும் என்று விதிமுறை இருப்பதால், பல முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றும், அதன் காரணமாக இந்த முறையை வாபஸ் பெற வேண்டும் என்றால் முதியவர்களுக்கு தனி வாக்குச்சாவடிகளில் அமைத்து விடலாம் என்று வலியுறுத்தப்பட்டு இருக்கின்றது.
இதற்கிடையே மாற்றுத்திறனாளிகள் உடைய உரிமைக்காக போராடும் டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தீபக் இந்த செயல்முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருக்கின்றார். இந்த இரு வழக்குகளும் இன்று விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.