தமிழக சட்டசபை தேர்தல் வரவிருக்கின்ற நிலையிலே, மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விரைவிலேயே நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க இருக்கிறார். அவர்கள் இருவரையும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அரசியலில் மிகக் கடுமையாக எதிர்த்தும் விமர்சித்தும் வருகின்றார் .துறையை சார்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகவே அரசியலுக்கு வரவேண்டாம். மக்களுக்கான தேவைகளை அறிந்து வைத்திருப்பீர்கள் இருக்கிறீர்களா? போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் சீமான்.
இந்த நிலையில், நேற்றைய தினம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் ரஜினி, மற்றும் கமலை, அடிக்கிற அடியில் விஜய் மட்டும் கிடையாது இனி எந்த ஒரு நடிகரும் அரசியலுக்கு வரக்கூடாது. ரஜினியும், கமலும், எம்,ஜி,ஆரை தூக்கிப் பிடித்துக் கொண்டு பேசினால் அந்த வாக்குகள் அனைத்தும் அதிமுகவிற்கு தான் போய் சேரும். எம்.ஜி.ஆர் பிரபாகரன் மீது மதிப்பு வைத்திருந்தார். அதன் காரணமாக நாங்கள் அவரை மதிக்கின்றோம் மற்றபடி எம்.ஜி.ஆர் என்ன நல்லாட்சியை கொடுத்துவிட்டார். கல்வியையும், மருத்துவத்தையும், தனியாருக்கு தூக்கி கொடுத்தவர்தான் எம்ஜிஆர் செய்த சாதனை. எம்ஜிஆர் முல்லைப்பெரியாறு உரிமையை கேரளாவிற்கு விட்டுக் கொடுத்தது தமிழகம் அறிந்த விஷயம்.
எம்.ஜி.ஆர் விமர்சித்ததற்காக அதிமுகவின் அமைச்சர்கள் நிர்வாகிகள் போன்றவர்கள் சீமானுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே விஜய்யின் ரசிகர்கள் சீமானுக்கு எதிராக கடுமையாக பொங்கி எழுந்து இருக்கிறார்கள். எங்கள் தளபதியை பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கின்றது என்ற பல வசனங்களை எழுதி மதுரை முழுவதும் அவருடைய ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள்.