கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது அதிமுக! எடுபடுமா அதிமுகவின் வியூகம்!

0
184

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா மற்றும் பாமக திமுக போன்ற கட்சிகள் இடம்பெற்றிருந்தன. சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெறவிருக்கின்ற நிலையில், கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கின்றது. முதல் கட்டமாக நேற்று முன் தினம் மாலை அமைச்சர் தங்கமணி, கே.பி. அன்பழகன் ஆகியோர் திண்டிவனத்தில் இருக்கின்றார்களா தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார்கள். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையானது மாலை 6 45 மணி அளவில் முடிவுற்றது இதில் தேர்தல் சம்பந்தமாக அவர்கள் ராமதாஸ் அவர்களுடன் ஆலோசனை செய்ததாக தகவல்கள் தெரிவித்தன.

இந்த ஆலோசனையின் பொழுது டிசம்பர் மாதம் 27ஆம் தேதி அதிமுகவின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி அடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது ஆனாலும் அதிமுகவின் இந்த அழைப்பிற்கு பாட்டாளி மக்கள் கட்சியை எந்த ஒரு இசைவும் அளிக்கவில்லை என்று தெரிகின்றது வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி இணையதளம் வாயிலாக பொதுக்குழுவை கூட்ட இருக்கின்றது. அந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர் தான் கூட்டணி தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று பாமக திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக, அதிமுக, மற்றும் பாமக, இடையே இன்னமும் கூட்டணி உறுதி ஆகாமல் எழும்பூரில் இருந்து வருகின்றது.

முன்னரே பாஜக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்ளாமல் அதிமுக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றது. ரஜினி கட்சி ஆரம்பித்த பின்னர் அவருக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து, கூட்டணி தொடர்பாக முடிவு செய்யலாம் என்ற எண்ணத்தில் பாரதிய ஜனதா இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மற்றொரு கூட்டணி கட்சியான தேமுதிக, அதிமுக வை அவ்வப்போது விமர்சனம் செய்து கொண்டும் தங்களுக்கு 41 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா என்பதில் குழப்பம் ஏற்பட்டு இருக்கின்றது.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாமக, பாஜக, தேமுதிக போன்ற கட்சிகள் அதிமுகவின் தலைமையிலான கூட்டணியில் இருந்தது.போல சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் என்பது கேள்வியாக தான் இருக்கின்றது.

Previous articleசீமானின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
Next articleபுத்தாண்டில் வாகனங்களின் விலை உயர்த்தப்படுகிறதா?