போகுமிடமெல்லாம் எதிர்ப்பு எழுந்த நிலையில் பாமகவினருக்காக மன்னிப்பு கேட்ட திமுக எம்பி!
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.குறிப்பாக ஆளும் அதிமுக முதல்வரின் தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் தங்களுடைய முதல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.ஆனால் எதிர்க்கட்சியான திமுக கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் தோல்வியை தழுவியதால் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முயற்சியில் கடந்த ஒரு வருட காலமாகவே தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஆனால் சமீபத்தில் தேர்தல் பிரச்சரதிற்காக திமுக செல்லும் இடங்களில் எல்லாம் அக்கட்சிக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.குறிப்பாக தருமபுரியில் அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் பார்க்காமல் செந்தில்குமார் எம்பி அப்பகுதி மக்களால் விரட்டி அடிக்கப்பட்டது.அதே போல சேலம் மாவட்டத்தில் பாமகவை ஆதாரமில்லாமல் விமர்சித்தது காரணமாக தயாநிதிமாறன் சென்ற வழியில் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பை தெரிவித்தது. இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் உதயநிதியின் சட்டையை பிடித்து அடிக்க சென்றது என கடுமையான எதிர்ப்பு அக்கட்சிக்கு உருவாகி வருகிறது.
இந்நிலையில் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தருமபுரியின் நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் செந்தில்குமார் வழக்கம் போல ட்விட்டரில் பொழுதை போக்கி கொண்டுள்ளார்.அதிலும் எந்நேரமும் அரசியல் ரீதியாக விமர்சிக்கும் பாமகவை சேர்ந்த ஒருவருக்காக தருமபுரி எம்பி செந்தில்குமார் மன்னிப்பு கேட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சிறப்பாக செயல்பட்ட எம்பிகள் பட்டியலை தனியார் ஊடகமொன்று வெளியிட்டிருந்தது.ஆனால் அதில் தருமபுரி எம்பியின் பெயர் இடம்பெறவில்லை என்பதை சுட்டிகாட்டி அவருக்கு ஆதரவாக பாமக நபர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.அதில் அவர், திரு செந்தில் அவர்கள் பல உதவிகளை இணையம் வழியாகவும் நேரடியாகவும் செய்துவந்தார்,அவர் பெயர் விடுபட்டுவிட்டது வருத்தம்!Mr @DrSenthil_MDRD
you will be remained by people for the Good Deeds!, என்று வருத்ததுடன் பதிவிட்டிருந்தார்.
திரு செந்தில் அவர்கள் பல உதவிகளை இணையம் வழியாகவும் நேரடியாகவும் செய்துவந்தார்,அவர் பெயர் விடுபட்டுவிட்டது வருத்தம்!Mr @DrSenthil_MDRD you will be remained by people for the Good Deeds! pic.twitter.com/9selfqtpxc https://t.co/BdrEAx3E65
— தொண்டைநாட்டு இளவரசன் (@Thondainadu) December 24, 2020
இதனையடுத்து திமுக எம்பிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி பாமக நபரை தங்களுடைய ஆர்மியிலிருந்து நீக்குவதாக பாமக ஆதரவாளர்கள் பதிவிட அதற்காக திமுக எம்பியான டாக்டர் செந்தில்குமார் மன்னிப்பு கேட்டு ட்விட் செய்துள்ளது அக்கட்சியினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/AnbuKRV/status/1342108729823514626?s=08
எங்க அண்ணன் @DrSenthil_MDRD பற்றி ஒத்த ட்விட் தான் பதிவு பண்ணேன்..
என்னைய #பங்காளி_ஆர்மி யில இருந்து நீக்க போறேன்னு மிரட்டல் விடுறாங்க..
அன்பு ஒன்று தான் அநாதை https://t.co/QOvVFHTcD6
— தொண்டைநாட்டு இளவரசன் (@Thondainadu) December 24, 2020
எனக்காக ஒரு முறை பெரிய மனது வைத்து @Thondainadu அவரை மன்னித்து விடுங்கள்.
இனி அவர் சட்டவிதிகுட்பட்டு சரியாக இருப்பார் என்று உறுதி அளிக்கிறேன்.😉 https://t.co/2bih14GwQc
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) December 24, 2020
இதுகுறித்து தருமபுரி எம்பி பதிவிட்டுள்ளதில்,எனக்காக ஒரு முறை பெரிய மனது வைத்து