சந்தானம் போட்ட புது கணக்கு! நிறைவேறுமா அவரது கனவு!

0
215

இந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் விஜய் ஆனந்த் இயக்கத்தில் டக்கால்டி, கண்ணன் இயக்கத்தில் பிஸ்கோத் ஆகிய இரு படங்களும் வெளியாகி இருக்கின்றன.

இந்த இரு படங்களின் அடுத்து கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் தயாராகி வரும் படம் டிக்கிலோனா. இந்த திரைப் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அனைகா நடிக்கின்றார். இந்த திரைப்படமும் முழுமையாக முடிக்கப்பட்டு விட்டது.

அண்மையில் ஜான்சன் இயக்கத்தில் ஹாரிஜ் ஜெயராஜ் படப்பிடிப்பை முடித்து விட்டார். சந்தானம் முன்னரே ஜான்சன் இயக்கத்தில் A1 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் அவர்களின் கூட்டணிக்கு இரண்டாவது திரைப்படமாகும்.

இப்பொழுது திருச்சி, கும்பகோணம், போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. என்ன திரைப்படம் என்று விசாரணை செய்தால் புதுமுக இயக்குனர் சீனிவாசராவ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் அது இந்த திரைப்படத்திற்கு சபாபதி என்று பெயரிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இன்னும் படத்திற்கு அதிகாரபூர்வமாக தலைப்பு அறிவிக்கப்படவில்லை.

இதற்கு முன்னரே தில்லுக்குதுட்டு, மற்றும் அந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகங்களில் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்திருந்தார். அதன்பின்னர் ஏ1 திரைப்படத்திற்கு பின்னர் ஹாரிஜ் ஜெயராஜ் திரைப்படத்தை ஜான்சனுக்கு அளித்தது போல டிஸ்கோ திரைப்படத்திற்கு பிறகு மறுபடியும் ஒரு திரைப்படத்தை கண்ணனுக்கு அளித்திருக்கின்றார் சந்தானம். எனவே ஒவ்வொரு இயக்குனருக்கும் இரண்டு திரைப்படங்கள் நடித்துக் கொடுக்க வேண்டும் என்பதுபோல கணக்குப் போட்டு வைத்திருக்கிறார் சந்தானம்.

Previous articleரஜினி அல்ல அழகிரி அல்ல யார் வந்தாலும் திமுகவின் வெற்றி வாய்ப்பை அசைக்க முடியாது! கனிமொழி ஆவேசம்!
Next articleபெண் பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பல்! போலீஸ் பாதுகாப்பு போட்ட நீதிமன்றம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here