சென்ற நவம்பர் மாதம் நடைபெற்ற பீகார் மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதள கூட்டணி வெற்றி அடைந்து பீகார் மாநில முதல்வராக மறுபடியும் நிதிஷ்குமார் பதவி ஏற்றார். பாரதிய ஜனதா தளம் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் மகாகத்பந்தன் கூட்டணி ஆளும் கூட்டணியை விட 12 ஆயிரம் வாக்குகளை குறைவாக பெற்றிருந்தன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை விட பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்ற காரணத்தால், நிதிஷ் குமாருக்கு பழையபடி பாஜக மதிப்பளிக்குமா என்ற கேள்வியும் எழுந்தன.
இந்த நிலையிலே, தான் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரும் பீகார் சட்டசபையின் முன்னாள் சபாநாயகருமான உதய் நாராயணன் நேற்றைய தினம் ஒரு ருசிகர தகவலை தெரிவித்தார்.
நிதிஷ்குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியே வந்த லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவை முதல்வராக அமரவைத்தால் எதிர்வரும் 2024 ஆம் வருடத்தில் பாராளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் எதிர்க்கட்சிகளின் பொது பிரதமர் வேட்பாளராக நிதீஷ்குமார் அறிவிக்கப்படலாம் என்று பீகார் மாநிலத்தின் முன்னாள் சபாநாயகர் முன் வைத்திருக்கும் யோசனை இது பீகார் மாநிலத்தின் அரசியல் முதல் தேசிய அரசியல் வரை கவனம் பெற்றிருக்கிறது.
அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் சில தினங்களுக்கு முன்பு பாஜகவில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். நீண்டகால கூட்டணி கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை கூட எந்தவித தார்மீக குற்றவுணர்வும் இல்லாமல் பாஜக இணைத்துக் கொள்கிறது. இன்று அந்த மாநிலத்தில் நடந்தது நாளை பீகாரில் ஏன் நடக்காது என்று பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களை நினைக்க வைத்திருக்கின்றது.
அதோடு அவர்கள் அந்த மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்களை பாஜகவில் இணைத்தால் அது பீகார் மாநிலத்தில் நிச்சயமாக எதிரொலிக்கும் என்று பாஜக விற்கு தெரிந்தே இந்த விஷயத்தை செய்திருக்கின்றது. ஐக்கிய ஜனதா தளத்திற்கும் ஆர் ஜே டிக்குமான வெறுப்புணர்வு இதே போல தான் ஆரம்பித்தது என்று தெரிவிக்கிறார்கள்.
இந்த பின்னணியிலேயே தான் பீகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியே வந்து தேஜஸ்ரீ யாதவ் முதலமைச்சராக நிதிஷ்குமார் உதவிபுரிய வேண்டும் எனவும், அவ்வாறு செய்தால் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அரசியல் அனுபவமும் அனுசரிக்கும் தன்மையும் இருக்கும் நித்திஷ் குமாரை பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் நிச்சயமாக அறிவிக்கும் எனவும் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்தே குரல்கள் எழுந்திருக்கின்றன.