இனிமேல் அரசியல் பிரவேசம் என்பது கிடையாது என்று திரைத் துறையில் சிறந்த திரைக் கலைஞர் ரஜினிகாந்த் அவர்கள் அறிவிக்கின்ற முடிவை வரவேற்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய வலைத்தளத்தில் இதனை அவர் பதிவிட்டு இருக்கிறார்.
எப்பொழுதும் திமுக, அதிமுக என்று திராவிட கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்த சீமான் கட்சி தொடங்க போகின்றேன் என்று ரஜினிகாந்த் அறிவித்தது முதல் அவருடைய மொத்த எதிர்ப்பும் ரஜினிகாந்த் பக்கம் திரும்பியது. சினிமா புகழ் என்ற ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலுக்கு வருவது எந்த வகையில் நியாயம். என்று மேடைக்கு மேடை ரஜினிக்கு எதிராக பேசி வந்தார் சீமான் அரசியல் கட்சியை ஆரம்பித்து நேரடியாக முதலமைச்சராக வேண்டும் என்று ரஜினி விரும்புவது தமிழக மக்களை இழிவாகவும் குறைவாகவும் மதிப்பிடும் செயல் எனவும் சீமான் தெரிவித்திருக்கின்றார்.
ரஜினிகாந்த் இன்னமும் நூறு திரைப்படங்களை கூட நடிக்கட்டும் அதற்கு எந்தவிதமான எதிர்ப்பும் கிடையாது. ஆனால் அரசியலுக்கு வருகின்றேன் என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள இயலாது. என்றும் தமிழன் தான் தமிழகத்தை ஆள வேண்டும் எனவும் ரஜினி வேண்டுமானாலும் மகாராஷ்டிராவிலும், கர்நாடகத்திலும் போய் கட்சியை தொடங்கட்டும் என்று ரஜினியை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். சீமான் சமீபத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை கண்டித்து அந்த கட்சி சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்று கொண்ட சீமான் ,அரசியலுக்கு வருபவர்கள் மக்கள் பிரச்சனைக்காக போராட வேண்டுமே ஒழிய திரைத்துறையில் நடித்துவிட்டு அதன் விளைவாக கிடைக்கப்பெறும் செல்வாக்கை பயன்படுத்தி அரசியலுக்கு வரக்கூடாது. நடித்தால் மட்டும் நாடாளும் தகுதி என்பது வந்து விடும் என்ற மனம் மாற வேண்டும். அய்யா நல்லகண்ணு தவிர இங்கே யாரும் நல்ல அரசியல்வாதி கிடையாது. எடப்பாடி பழனிச்சாமி தமிழர்தான் ஆனாலும் அவர் ஆட்சி நன்றாக இல்லை. ஆகவே நாங்கள் வந்து நல்லாட்சி தருகின்றோம் அதற்காக மற்றவர்களை ஏற்றுக் கொள்ள இயலாது. என்று ரஜினிக்கு எதிராக சீமான் மிக ஆவேசமாக தெரிவித்திருக்கிறார்.
அதோடு மட்டுமில்லாமல், ரஜினி மற்றும் கமலை மிகக்கடுமையாக விமர்சனம் செய்து இருக்கின்றார் சீமான். இந்த நிலையில்தான் திடீரென்று தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி நடிகர் ரஜினிகாந்த் என்னால் அரசியல் கட்சியை தொடங்கி அரசியலுக்கு வர இயலாது என்று அறிவித்திருக்கிறார். இது அவருடைய ரசிகர்கள் மற்றும் அவரது அரசியல் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள். இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த நிலையில் இதுதொடர்பாக தன்னுடைய வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கின்றார். சீமான் இனி அரசியல் பிரவேசம் கிடையாது என்று திரை உலகின் சிறந்த நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய உடல் நலனை கருத்தில் வைத்து எடுத்திருக்கின்ற முடிவை முழுமையாக வரவேற்கின்றேன். அவர் முழு உடல் நலம் பெற்று கலையுலக பயணத்தை தொடர வேண்டும் என்று வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என பதிவிட்டு இருக்கிறார்.