திமுக காங்கிரஸ் இடையே ஏற்பட்ட மோதல்! கூட்டணியில் சிக்கல் ஏற்படுமா?

0
144

ஜனநாயகம் என்ற மாண்பிற்கு எதிராக மாநில ஆளுநர்களை பகடைக்காயாக வைத்து ஆட்டிப்படைக்கும் ஒரு நிலைக்கு பிரதமர் நரேந்திரமோடி வந்திருக்கிறார். இது புதுச்சேரி மாநிலத்திற்கு மட்டும் ஏற்பட்ட ஆபத்து கிடையாது. ஒட்டுமொத்த தென்னிந்தியாவிற்கும் ஏற்பட்டிருக்கும் ஆபத்து என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரியில் காங்கிரஸ், மற்றும் திமுக ,கட்சிகள் இடையில் சில மோதல்கள் ஏற்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை சார்பாக நடத்தப்படும் கூட்டங்கள், மற்றும் போராட்டங்கள் எதிலுமே திமுக பங்கு கொள்ளாமல் இருக்கின்றது. அதோடு எதிர்வரும் சட்டசபை தேர்தலில் திமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் எனவும், புதுச்சேரியிலும் திமுக ஆட்சி நடைபெறும் என்றும் , புதுச்சேரியில் இருக்கின்ற அந்தக் கட்சியின் தலைவர்கள் உரையாற்ற தொடங்கியிருக்கிறார்கள். ஆகவே காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருந்து திமுக விலகும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே. எஸ். அழகிரி பாண்டிச்சேரியில் நேற்றையதினம் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது அவர் தெரிவித்ததாவது, புதுச்சேரி மாநில ஆளுநர் சட்டத்திற்கு அப்பாற்பட்டு ஆட்சி செய்து வருகிறார் .ஆளுநர் கிரண்பேடி அவர்களுக்கு எதிராக காந்தியடிகள் வழியிலே அமைச்சர் கந்தசாமி போராட்டம் நடத்தியிருக்கிறார். இந்த நிலை ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய ஆபத்து ஜனநாயகத்திற்கு எதிராக ஆளுநரை பொம்மையாக வைத்து ஆட்டிப்படைக்கும் ஒரு நிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திருக்கின்றார். இது புதுச்சேரி மாநிலத்திற்கு மட்டும் ஏற்பட்ட ஆபத்து கிடையாது ஒட்டுமொத்தமாக தென்னிந்தியாவிற்கு ஏற்பட்ட ஆபத்து என்று தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் திமுக தலைமையிலே இருக்கின்ற கட்சியினர் இடையில் கருத்து வேறுபாடு இருந்து வருகின்றது. அதனை பேசி தீர்க்க வேண்டும் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி திறமை மிகுந்தவர் அதனை அவர் நிச்சயம் செய்வார். தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் இதுகுறித்து பேசி ஒரு முடிவுக்கு வருவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது. தொகுதி பங்கீட்டில் சென்ற முறையை விட இந்த முறை குறைவு அல்லது அதிகம் என்ற விவாதம் எதுவும் கிடையாது. சென்ற பாராளுமன்ற தேர்தலில் ஒன்பது இடங்களை பெற்று எட்டு இடங்களில் வெற்றி அடைந்த காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கொள்கை ரீதியில் ஒற்றுமையாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின் தான் என நாங்கள் வெளிப்படையாக அறிவித்து இருக்கின்றோம். ஆனாலும் ஆளும் தரப்பின் கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்ய இயலாத ஒரு நிலை இருந்து வருகிறது. திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

Previous articleதோல்வி பயத்தில் உளறும் எதிர்க்கட்சித் தலைவர்! அமைச்சர் பாண்டியராஜன் விளாசல்!
Next articleஎதிரிகளின் எண்ணம் பலிக்காது! சசிகலாவின் வருகை தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர்!