வெளியானது அண்ணாத்த திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி! மகிழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள்!

Photo of author

By Sakthi

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் அண்ணாத்த, இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது அண்ணாத்த திரைப்படக் குழு.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தர்பார் போன வருடம் பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக வெறியாகியது. இந்த திரைப்படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் அண்ணாத்த. நடிகர் அஜித்குமாருக்கு வேதாளம், விவேகம், வீரம், விசுவாசம் ,என்று தொடர்ந்து நான்கு படங்களை வெற்றி திரைப்படங்களாக கொடுத்த இயக்குனர் சிறுத்தை சிவா இவருடைய இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் டி இமான் இசை அமைக்க அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகின்றது.

இத்திரைப்படத்தின் இறுதிப் படப்பிடிப்பு ஆனது சென்ற வருடம் டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் இருக்கக்கூடிய ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஆரம்பமானது. கொரோனாவிற்கு முன்பாகவே இந்த திரைப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடித்திருந்தது படக்குழு. இந்த நிலையில், டிசம்பர் மாதம் ஆரம்பித்து ஜனவரி மாதத்திற்குள் இந்த திரைப்படத்தை முடித்து விடலாம் என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனாலும் படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்த 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட காரணத்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மறுபடியும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையிலே, அந்த திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ். நவம்பர் மாதம் நான்காம் தேதி தீபாவளி சிறப்பு திரைப்படமாக வெளியாகயிருக்கிறது. இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியிடுவது என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனாலும் கொரோனாவின் காரணமாக அனைத்தும் மாறி விட்டது.அதன் காரணமாக நடப்பு ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று கேட்டால் சட்டசபைத் தேர்தல் முடிந்த பின்பு ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கிறார்கள். அப்படியானால் ஜூன் மாதத்தில் ரஜினி பங்கேற்றால் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், கீர்த்திசுரேஷ், மீனா, குஷ்பூ ,பிரகாஷ்ராஜ், நயன்தாரா, சூரி, மற்றும் சதீஷ் ,ஜார்ஜ் மரியான் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்ணாத்த திரைப்படம் வெளியாகும் அதே 2021 ஆம் ஆண்டு தீபாவளி தினம் அன்று தான் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ,இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் பெயரிடப்படாத ஒரு திரைப்படமும் வெளியிட திட்டமிட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இந்தத் திரைப்படமும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் என்ற காரணத்தால், நிச்சயமாக விஜய் படம் இந்த ஆண்டு கிடையாது என உறுதியாக தெரிவிக்கிறார்கள்.