பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எனவே இன்றைய தினம் ஆரம்பித்தது இந்த கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவர் பேசும்போது இந்த வருடம் நாட்டிற்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது .இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து பல சவால்களை எதிர் கொண்டு இருக்கிறது. எதிர்கொள்ளும் சவால் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் இந்தியாவை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது என்று தெரிவித்தார்.
எப்பேர்பட்ட சவாலாக இருந்தாலும், இந்தியாவுடைய வளர்ச்சியை தடுத்து நிறுத்த இயலாது. நம்முடைய நாடு உலகத்திற்கே தற்சமயம் உதாரணம் இருக்கிறது .ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, திட்டம் காரணமாக நாட்டில் இருக்கக்கூடிய மக்களில் பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். சுய சார்பாக இருப்பதே நம்முடைய தாரக மந்திரம். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது அரசு தன்னுடைய கவனத்தை செலுத்தி இருக்கிறது. அரசு எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக நாட்டில் கொரோனா பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்திருக்கிறது. கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட பல அதிரடி நடவடிக்கை காரணமாக நாட்டில் இருக்கக்கூடிய அனேக மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் ஊரடங்கு காலத்தில் குறிப்பாக இந்த நிலை யாருக்கும் இந்தியாவில் ஏற்படவில்லை நன்றி தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து துறைகளிலும் அரசு முழுமையான கவனத்தை செலுத்தி வருகின்றது .விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு தற்சமயம் உயர்த்தியது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே இருக்கும் ஒத்துழைப்பு ஜனநாயகத்தை இன்னும் வலிமையாக்கும் ஒட்டுமொத்த நாட்டில் 22 எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது தெரிவித்தார் ராம்நாத் கோவிந்த்.