தேர்தலில் அரசியல் லாபத்திற்காகவே ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டது! ஸ்டாலின் குற்றச்சாட்டு!

0
140

திமுக சார்பாக மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தி வரும் ஸ்டாலின் மக்களை சந்தித்து வருகின்றார். அந்த சமயத்தில் ஆளும் கட்சியான அதிமுக மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றார்.

தற்சமயம் இந்த கிராம சபைக் கூட்டத்தின் அடுத்த கட்டமாக, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார் ஸ்டாலின். அந்த விதத்தில் ஸ்டாலின் இன்றைய தினம் வேலூர் சட்டசபைத் தொகுதியில் தன்னுடைய பரப்புரையை தொடங்கினார்.

அந்த கூட்டத்தின் போது உரையாற்றிய ஸ்டாலின் ஜெயலலிதா மரணத்திற்கு என்ன காரணம் என்று ஆளும் தரப்பு இதுவரையில், கண்டுபிடிக்கவில்லை. ஆனாலும் தேர்தல் சமயத்தில் திமுக வெற்றி பெற்று விடும் என்ற காரணத்தால் அவர்கள் கட்டிய டெபாசிட் பணத்தையாவது வாங்கி விடலாம் என்ற காரணத்துக்காகவே ஜெயலலிதாவின் நினைவு இல்லம், மற்றும் அவருடைய நினைவு இடத்தை திறந்து வைத்திருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் ,உள்ளாட்சித் தேர்தல் முறைப்படி நடத்தப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார் ஸ்டாலின் .அதோடு திமுக ஆட்சியில் விவசாய கடன், நகைக் கடன் போன்றவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

Previous articleஅகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவை முதல்வருக்கு எழுதிய கடிதம்- திகைப்பில் பாமக மற்றும் இதர கட்சிகள்.
Next articleசசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவது தொடர்பாக இன்றைய தினம் முடிவு!