தமிழக அரசின் அதிரடி உத்தரவு! மாணவர்கள் மகிழ்ச்சி!

0
133

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் அரசு கல்லூரிக்கான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கடந்த 50 தினங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள் இந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு இசைவு அளித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எம்பிபிஎஸ் பட்டப் படிப்பிற்கு ஒரு வருட கட்டணமாக 13 ஆயிரத்து 610 ரூபாயும், பிடிஎஸ் என்ற பட்டப் படிப்பிற்கு ஒரு வருடக் கட்டணமாக 16,610 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது பிஎஸ்சி நர்சிங் பிசியோதெரபி போன்ற படிப்புகளுக்கு தனி வகுப்பு கட்டணமாக தலா மூன்றாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டது .

எம், டி எம் எஸ், எம்டிஎஸ், போன்ற பட்டப் படிப்புகளுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் வரையிலும், முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு 20,000 ரூபாயும் முதுநிலை நர்சிங் படிப்பிற்கு 5 ஆயிரம் ரூபாயும் தனி வகுப்பு கட்டணம் செலுத்த வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நடைமுறை தற்சமயம் பயின்று வரும் மாணவர்களுக்கும், எதிர்காலத்தில் கல்லூரியில் இணையும் மாணவர்களுக்கும், இது பொருந்தும் என்றும் முன்னரே செலுத்தப்பட்ட கட்டணங்கள் எதுவும் திரும்ப வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பை அடுத்து அனைத்து மாணவர்களும் போராட்டத்தை கைவிட்டு பட்டாசுகளை வெடித்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதோடு தமிழக அரசுக்கு அவர்கள் நன்றியையும் தெரிவித்து இருக்கிறார்கள்.

Previous articleகுடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட ராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்! மத்திய அரசு அதிர்ச்சி!
Next articleவகுப்புகள் தொடக்கம்! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!