தொடங்கியது கல்லூரி வகுப்புகள்! மாணவர்கள் மகிழ்ச்சி!

0
132

தமிழ்நாட்டில் இருக்கின்ற கல்லூரிகள் அனைத்தும் வரும் திங்கள் கிழமையிலிருந்து ஆரம்பிக்க இருக்கின்ற சமயத்தில் வாரத்திற்கு ஆறு தினங்கள் வகுப்புகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

கொரோனா காரணமாக சென்ற வருடம் மார்ச்சு மாதம் முதல் பள்ளிகள், மற்றும் கல்லூரிகள், அனைத்தும் செயல்பாட்டை நிறுத்தினர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி முதல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவ மாணவிகளுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டன.

ஆனால் மற்ற ஆண்டு பயிலும் மாணவர், மற்றும் மாணவிகளுக்கு இணையதளம் மூலமாகவே வகுப்புகள் நடந்து வந்தது. இதனைத் தொடர்ந்து கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என மாணவ மாணவிகளும் மற்றும் பெற்றோர்களும் எதிர்பார்த்திருந்தார்கள்.

அவர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க சில தினங்களுக்கு முன்பாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலை, மற்றும் அறிவியல் தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் வேளாண் கல்லூரிகள் என்று அனைத்து விதமான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் வருகின்ற திங்கள் கிழமையில் இருந்து ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

வரும் திங்கள் கிழமையில் இருந்து அனைத்து விதமான கல்லூரிகளும் ஆரம்பிக்க இருக்கின்ற நிலையில், வாரத்திற்கு ஆறு தினங்கள் வகுப்புகள் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அறிவித்து இருக்கிறது இந்த கல்வி ஆண்டு முழுவதும் கல்லூரிகள் வாரத்திற்கு ஆறு தினங்கள் செயல்படும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.

Previous articleவிவசாய கடன்கள் தள்ளுபடி! முதல்வரை பாராட்டிய மருத்துவர் அய்யா!
Next articleசசிகலாவுக்கு பாதுகாப்பு கோரி டிஜிபியிடம் மனு கொடுத்த நிர்வாகி! பரபரக்கும் அதிமுக!