சமையல் எரிவாயு சிலிண்டர் பெட்ரோல் டீசல் சின்ன வெங்காயம் உப்பு போன்ற பல அத்தியாவசிய பொருட்களின் விலை மிகக் கடுமையாக தற்சமயம் உயர்ந்து இருக்கின்றது. இதன் காரணமாக, எல்லாத் தரப்பு மக்களும் கடுமையான சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்து வருகிறது.
அதோடு விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவும் இயலும் என்ற காரணத்தால், நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து இருக்கின்றது. ஆனால் அதற்கு மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்தது போல தெரியவில்லை.
இந்த நிலையில்,சென்னையில் இன்றைய தினம் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு தொண்ணூத்தி ஒரு ரூபாய் 45 காசுகள் ஆக இருக்கின்றது. அதேபோல ஒரு லிட்டர் டீசல் 84 ரூபாய் 77 காசுகளாக இருந்துவருகின்றது. சென்னையில் நேற்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை தொண்ணூத்தி ஒரு ரூபாய் 19 காசுகளாக இருந்தது. அதே போல டீசல் ஒரு லிட்டர் 84 ரூபாய் 44 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இன்றைய தினம் பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டருக்கு 97 ரூபாய் 45 காசுகள் ஆகவும், டீசல் 33 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டருக்கு 84 ரூபாய் 77 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.