வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஏற்பட்ட மின் தடை! அச்சத்தில் திமுக ஆட்சியரிடம் மனு
தேனி வடக்கு மாவட்ட திமுகவின் பொறுப்பாளரும் தேனி சட்டசபை தொகுதியில் திமுகவின் வேட்பாளருமான தங்க தமிழ்செல்வன் நேற்று தேனி மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனிடம் இரண்டு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தார்.
அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்ததாவது, தேனி தேனி அருகே கொடுவிலார்பட்டியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென மின் தடை உண்டானது. அந்த சமயத்தில் வாக்கு என்னும் மையத்தில் யு.பி.எஸ் கருவியும் செயல்படவில்லை.
பதிமூன்று நிமிடங்கள் நீடித்த இந்த மின் தடைகாலத்தில் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்த தொலைக்காட்சியும் இயங்கவில்லை என தெரிவித்திருக்கிறார்.வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின் தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்வது தேர்தல் ஆணையத்தின் பணி. ஆகவே இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக மாவட்ட ஆட்சியர் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார்.
மேலும் வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்திருக்கும் பகுதியில் போதிய பாதுகாப்பு இல்லை என தெரிவித்திருக்கிறார். ஆகவே போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கின்ற அறைக்கும் இடையேயான தூரம் அதிகமாக இருக்கிறது. ஆகவே வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து வரும்போது வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் பிரதிநிதி போன்றோர் உடன் வர அனுமதிகொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருப்பதாக கூறியிருக்கிறார்.