ஆட்சி மாறியதால் ஆக்சிஜன் பற்றாக்குறை தீருமா? மக்கள் எதிர்பார்ப்பு!
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் கொரோனாவின் 2ஆவது அலையின் பாதிப்பினால் இந்தியா மிகவும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.அதில் மிகவும் முக்கியமாக ஆக்சிஜன் கிடைக்காததும், கொரோனா தடுப்பூசி மருந்தான ரெம்டிசிவர் தட்டுப்பாடும் ஆகும். ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிறைய உயிர்கள் பலியாகின்றன.இந்நிலையில் கொரோனா பாதிப்புகளை குறைக்க மாநில அரசுகள் மிகவும் தீவிரமாக கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன.தற்போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
மேலும் ஞாயிற்றுகிழமைகளில் முழு நேர ஊரடங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. நோய் தொற்றின் பரவலால் ஊரடங்கு நேரம் மேலும் நீடிக்கபடுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து அடுத்த முதல்வராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் நேற்று மாலை தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன்,நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்,வருவாய்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.
அதில் தமிழகத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் இருப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும்,கோரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதி,ஆக்சிஜன் இருப்பு மற்றும் மருத்துவர்களின் இருப்பு போன்றவற்றை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.மாவட்டம் தோறும் மருத்துவனைகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்