ஆக்சிஜன் சப்ளை குறைத்தது மத்திய அரசு!அமைச்சர்  வெளியிட்ட அறிவிப்பு!

0
172
Central government reduces oxygen supply! Minister announces!
Central government reduces oxygen supply! Minister announces!

ஆக்சிஜன் சப்ளை குறைத்தது மத்திய அரசு!அமைச்சர்  வெளியிட்ட அறிவிப்பு!

கொரோனா 2 ம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தருவாயில் உயிரிழப்புகளும் உச்சத்தில் போய்க் கொண்டிருக்கின்றன.கடந்த ஒரு வருடமாக மக்களை வாட்டி எடுக்கும் கொரோனாவின் பாதிப்பு குறையுமா என அனைவரும் எதிர்பார்க்கும் தருவாயில் அதன் தாக்கமோ மாநிலத்திற்கு மாநிலம் வைரஸ் உருமாற்றம் அடைந்து மக்களிடையே அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.இந்நிலையில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் பல்வேறு யுக்திகளையும்,கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.ஆனாலும் நமது மக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் எப்படியோ வைரஸ் தொற்று அனைவரையும் படுத்தி எடுக்கிறது.

மிக முக்கியமாக ஆக்சிஜன் பற்றாக்குறையே பல உயிர்களை பலி வாங்கி வருகிறது.இதை கேள்விப்பட்ட அண்டை நாடுகள் அவர்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறது.இந்நிலையில் இந்தியாவின் வட மாநிலங்கள் கொரோனாவின் இரண்டாவது அலையினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருகின்றன. காரணம் ஆக்சிஜன் பற்றாக்குறையே ஆகும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

மராட்டியத்தில் கொரோனா நோயாளிகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணம் என்னவென்று மராத்தியத்தின் மாநில சுகாதாரத்துரை அமைச்சர் ராஜேஷ் தோபே கூறுகையில் மத்திய அரசை குற்றம் சுமத்தியுள்ளர்.இதுகுறித்து அவர் கூறுகையில் கர்நாடகாவில் இருந்து மருத்துவ திரவ ஆக்சிஜன் மராட்டியத்திற்கு வந்ததாகவும் தற்போது அதை மத்திய அரசு 50 மெட்ரிக் டன் அளவு குறைதுள்ளதாகவும் கூறினார்.

இந்தியாவில் அதிக அளவு பாதிப்பில் இருக்கும் இந்த மாநிலத்தில் இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்றும் கருத்தும் தெரிவித்தார்.இதை பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் பிற அதிகாரிகள் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.இதை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Previous articleஇடுகாடாக மாறிய இந்தியா! அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை!
Next articleமு.க ஸ்டாலினுக்கு அவசர கடிதம்! விஜய் சேதுபதி,வெற்றிமாறன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு!