பிரபல நடிகரை பலிகொண்டகொரோனா சோகத்தில் திரையுலகம் !

0
135

பிரபல திரைப்பட துணை நடிகர் மாறன் கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த இந்தி திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார். துணை நடிகர் மாறன் ஆதிவாசி என்ற கதாபாத்திரத்தில் அந்த திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு தலைநகரம், வேட்டைக்காரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் கானா பாடல்களையும் மேடை கச்சேரிகளில் பாடி வந்திருக்கிறார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வந்த இவருக்கு சென்ற சில தினங்களுக்கு முன்னர் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் மாறனுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது ஆனாலும் சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று இரவு அவர் காலமானார். அவருக்கு வயது 48 என்று சொல்லப்படுகிறது. நோய் தொற்றினால் திரையுலகினர் அடுத்தடுத்து மரணம் அடைவது திரை ரசிகர்கள் இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Previous articleஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை! அசம்பாவிதத்தினால் பல நோயாளிகள் பரிதாப பலி!
Next articleஎக்காரணம் கொண்டும் இதை செய்ய வேண்டாம்? தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் வேண்டுகோள்