நெடுந்தொடர்களின் நேரம் குறைக்கப்படுகிறதா?

0
99

தமிழ் தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சென்ற வருடம் இதுபோல எதிர்பாராத சமயத்தில் திடீரென்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாக, ஏற்கனவே கையில் இருந்த தொடர்களின் எபிசோடுகளை வைத்து ஒளிபரப்பாகி கொண்டிருந்தன சேனல்கள். அதன் பின்னர் வேறு வழியில்லாமல் பழைய தொடர்களை தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டு வந்தார்கள். ஆனால் இந்த முறை அதை தவிர்க்கும் விதமாகவே தேர்தல் சமயத்தில் மிக வேக வேகமாக படப்பிடிப்பை நடத்த தெரிவித்திருக்கிறார்கள் சேனல் நிர்வாகிகள். அவ்வாறு இருக்கும் சமயத்திலும் கூட இன்றும்கூட பல தொலைக்காட்சிகளில் எபிசோடு பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.

இதன் காரணமாக, சன் தொலைக்காட்சி தன்னுடைய சேனலில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் நேரத்தை குறைத்து நாட்களை குறித்தும் இந்த பற்றாக்குறையை சமாளிப்பதற்கு முயற்சி செய்திருக்கிறது. தற்சமயம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தொடர்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. அதனை திங்கள் முதல் வியாழன் வரை நாட்களை குறைக்க சன் குழுமம் திட்டமிட்டிருக்கிறதாம். அத்துடன் தொடர்களின் நேரமான 24 நிமிடங்களை 20 நிமிடங்களாக குறைப்பதற்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம்.

அந்த நான்கு நிமிடங்களை ஈடு செய்வதற்கு அந்த தொடரின் பாடல் காட்சியின் நேரத்தை கூட்டும் படியாகவும் இல்லாவிட்டால் முந்தைய எபிசோட் சுருக்கத்தை சொல்லும் படியும் சொல்லியிருக்கிறார்களாம்.. விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் தொடர்களை நிறுத்திவிட்டு அதன் முந்தைய பகுதிகளை மீண்டும் ஒளிபரப்ப தொடங்கி இருக்கிறார்களாம்.

விஜய் தொலைக்காட்சி அந்த தொலைக்காட்சிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் ரியாலிட்டி ஷோக்களை மட்டும் மீண்டும் ஒளிபரப்ப முடிவு செய்திருக்கிறது ராஜ் தொலைக்காட்சியில் சமீபத்தில்தான் புத்தம் புதிய தொடர்கள் ஒளிபரப்பப்பட்டன. அதனால் தற்சமயம் தான் டி.ஆர்.பி உள்ளேயே நுழைந்து இருக்கிறோம். அதற்குள் இவ்வாறு ஆகிவிட்டதே என்று வருத்தப்பட்ட ராஜ் தொலைக்காட்சி நிர்வாகம் மிகவும் வேகவேகமாக தன்னுடைய தொடர்களின் படப்பிடிப்பை நடக்க வைத்தது. அப்படியே இருந்தாலும் பற்றாக்குறை ஏற்பட்டு அதன் காரணமாக, ஏற்கனவே போடப்பட்ட எபிசோடுகள் மறுபடியும் போட வேண்டிய கட்டாயத்தில் அந்த தொலைக்காட்சி இருந்துவருகிறது மக்களும் ஏற்கனவே பார்த்த எபிசோடுகளை பார்த்து பழகிவிட்டதால் இதையும் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது.

Previous articleநோய்தொற்று பாதித்த பெற்றோர்களின் குழந்தைகளை பாதுகாக்க பாதுகாப்பு மையம்!
Next articleதயாராகும் ஆப்பு! அதிமுக இவரை கை கழுவுமா அல்லது காப்பாற்றுமா?