இந்திய நாட்டில் சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் இந்த நோய்த்தொற்று பரவல் பரவத்தொடங்கியது அந்த சமயத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் நாட்டுடைய பொருளாதாரமும், மக்களுடைய வாழ்வாதாரமும், பெரிய அளவில் பாதிப்பானது. அதன் பின்னர் நோய்த்தொற்றுகள் படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்தியாவில் ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.
உலக அளவில் இந்த நோய்த் தொற்றினால் அதிக பாதிப்புக்கு உள்ளான நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இருந்த இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட தினசரி நோய் தொற்று பாதிப்பு இந்த மாதத்தில் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
அதன்படி சென்ற 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக இரண்டு லட்சத்து 76 ஆயிரத்து 70 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில். பாதிக்கப்பட்டோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 2 கோடியே 57 லட்சத்து 72 ஆயிரத்து 400 ஆக அதிகரித்திருக்கிறது.
இதனைப் போலவே நேற்று மட்டும் 3 லட்சத்து 69 ஆயிரத்து 27 பேர் இந்த நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதோடு மூவாயிரத்து 874 பேர் இந்த நோயினால் உயிரிழந்து இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இதன்காரணமாக, தற்சமயம் வரையில் இந்த நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 87 ஆயிரத்து 222 ஆக அதிகரித்திருக்கிறது. அதோடு இந்த நோய்களில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 23 லட்சத்து 55 ஆயிரத்து 440 ஆகவும், இதனால் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 31 லட்சத்து 29 ஆயிரத்து 778 ஆக இருந்து வருகிறது என மத்திய சுகாதாரத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.