இன்று ஒரு மணியளவில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

0
133

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் மிக அதிகமாக இருந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு பக்கம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை மற்றும் நிறுவனங்கள் அதிகரித்து வருகிறது. இருந்தாலும் இன்னொரு புறம் குணமடைந்த அவர் களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனாலும் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனை கருத்தில் கொண்டு மே மாதம் பத்தாம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தி மாநில அரசு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து மே மாதம் 24ஆம் தேதி படம் இந்த ஊரடங்கு முடிவடைய இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இன்று முதல் அமைச்சர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். அந்த சமயத்தில் உரையாற்றிய அவர் நோய்த் தொற்றுகளைத் தடுப்பதற்கும் தமிழ்நாட்டில் தளர்வுகளே இல்லாத ஊரடங்கு அமல் படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. எனவும் முழு ஊரடங்கை விடுமுறை என்று நினைத்துக் கொண்டு பொதுமக்கள் சிலர் ஊர் சுற்றி வருகிறார்கள் எனவும், தெரிவித்திருக்கிறார் முதல்வர். அதோடு தளர்வுகள் இல்லாத முழு விவரங்கள் குறித்த அறிவிப்பை மதியம் ஒரு மணி அளவில் அறிவிக்க வேண்டி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Previous articleபிரபல ஹீரோவுக்கு அக்காவாகும் ஜோதிகா! எந்த படம் தெரியுமா?
Next article8000- த்தை தாண்டிய கருப்பு பூஞ்சைத் தொற்று! இந்த மூன்று மாநிலங்களில் அதிகமான எண்ணிக்கை!