எல்லை தாண்டிபோய் தள்ளுமுள்ளு – சிறந்த தமிழன்கள்!
கொரோனா இரண்டாம் அலையில் அனைத்து மாநிலங்களும் பல முயற்சி செய்து கொரோனாவை விரட்ட வழி வகை செய்து வருகின்றது.அதற்காக பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு என பல திட்டங்களை செய்யல்படுதினாலும் கொரோனாவின் தீவிரம் குறைந்த பாடில்லை.
அதற்கிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்றார்.அனைவருக்கும் உபயோகப்படும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ஊரடங்கு காலத்தில் கிடைக்கும் என்றும், அலுவலகங்கள், பேருந்துகள் மட்டும் செயல்படாது எனவும் கூறினார்.
இதன் காரணமாக டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டது.இருந்தும் கொரோனா குறைந்த பாடில்லை. எனவே நாளை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல் படுத்துவதால் டாஸ்மாக் திறக்க வாய்ப்பே இல்லை, என்பதை அறிந்த தமிழக குடிமகன்கள் அனைவரும் கர்நாடகா மாநிலத்திற்கு படை எடுத்து வருகின்றனர்.
இன்று ஒருநாள் மக்களின் தேவைக்காக பேருந்துகள் மற்றும் அனைத்து கடைகளும் செயல்படலாம் என முதல்வர் ஆணைக்கிணங்க இன்று பேருந்துகள் செயல்படுகின்றன.
இதை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் பகுதிகளில், உள்ள குடிமகன்கள் சில கிலோ மீட்டர்களே உள்ள கர்நாடகாவிற்கு படை எடுத்தனர்.
கர்நாடகாவில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மதுபான கடைகள் திறந்திருக்கும்.எனவே தமிழக குடிமகன்கள் ஒரு வாரத்திற்கு தேவையான மது வகைகளை வாங்கி குவித்துள்ளனர்.
அங்கு எந்த தனிமனித இடைவெளியும் இல்லை, முககவசம் சரியாக அணியவில்லை, ஊரடங்கு எதற்காக என்பதை மக்கள் புரிந்துகொண்டால் மட்டுமே கோரோனாவிலிருந்து நாடு முழுவதும் வெளியேற முடியும்.
நமக்கு சிகிச்சை செய்யும் முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள் போன்றோர் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர் என்பதை மக்கள் உணர வேண்டும்.