80’s, 90’s ன் பிரபல இசை அமைப்பாளர் காலமானார்!
இந்த கொரோனா அலையின் இரண்டாவது கால கட்டத்தில் பல காரணங்களினால் பல திரைத்துறை சார்ந்த பிரபலங்களை இழந்து வருகிறோம்.திரை துறைக்கு இது பெரும் இழப்பாகவே இருக்கிறது.
விஜய் பாட்டிலை சேர்ந்த ராம் லக்ஷ்மன் இந்தி, மராட்டி மற்றும் போஜ்புரி மொழி திரைப்படங்களில் இசைஅமைப்பாளராக இசை அமைத்துள்ளார்.
இவர் முதலில் மராத்தி பாடல்களுக்கு இசை அமைத்தார்.அதன் பிறகு இந்தி பாடல்களுக்கும் இசை அமைக்க ஆரம்பித்தார்.இந்தியில் தாதா கோண்ட்கே என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
மேலும், இவர் 1989 ம் ஆண்டில் சல்மான் கான் படமான மைனே பியர் கியாஎன்ற படத்தில் அவர் இசை அமைத்த நிலையில் எஸ்.பி.பி ஐ பாட வைத்தார்.இந்த இசையின் மூலம் பெரும் புகழ் அடைந்தார்.
மேலும் 78 வயதான இவர் ஹிந்தி, மராத்தி, மற்றும் போஜ்புரி மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராம் லக்ஷ்மன் உடல் நிலை சரியில்லாமல் நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில் இன்று அதிகாலை நாக்பூரில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.இதன் காரணமாக மூத்த இசைஅமைப்பாளருக்கு திரைத்துறையினர் பலரும் தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.