இப்படி ஒரு மனைவியா? வேலையை விட்டு செய்த செயல்!
நாம் எத்தனையோ பேரை பார்க்கிறோம்.அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்களா என்று பார்த்தால் கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்வார்கள்.தற்போதைய கால மாற்றத்தால் அவரவர் விருப்பபடி மட்டுமே இருக்கின்றனர்.
ஒடிசாவில் தனது செவிலியர் பணியை விட்டு கணவனுக்காக தொண்டு பணியை செய்து வருகிறார்.அவரது பெயர் மதுஸ்மிதா பிரஸ்டி ஆகும்.
இதை அவர் கூறும் போது, கடந்த 9 வருடங்களாக நோயாளிகளை பார்த்து கொள்ளும் செவிலியர் ஆக பணியாற்றி வந்ததாகவும், தற்போது அந்த பணியை ராஜினாமா செய்து கணவனுக்கு தகனம் செய்வதில் உதவுவதாகவும் கூறினார்.
கடந்த 2019 ம் ஆண்டிலிருந்து, கைவிடப்பட்ட உடல்களை கணவனுடன் சேர்ந்து இறுதி சடங்குகளை செய்து வருகிறேன் என்றும், இரண்டரை வருடங்களாக 500 உடல்களை தகனம் செய்துள்ளதாக கூறினார்.
ஒடிசாவின் தலைநகரான புவனேஷ்வரில் கடந்த கொரோனா காலத்தில் கைவிடப்பட்ட 300 உடல்களுக்கு இறுதி சடங்கு செய்ததாகவும், கூறினார்.
மேலும் ஒரு பெண்ணாக இருந்து, இந்த பணியை செய்வதற்கு பல்வேறு விமர்சனங்களை சொல்வதாகவும் கூறினார்.ஆனாலும் தன் கணவர் நடத்தும் அறக்கட்டளையின் கீழ் தான் தொடர்ந்து இந்த தொண்டு பணியை செய்வேன், என்றும் கூறினார்.