தமிழகத்தில் ஏற்கனவே நோய்த் தொற்று பரவல் மிகத் தீவிரமாக தாண்டவம் ஆடி வருகிறது. அதில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனாலும் அந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறது அரசாங்கம்.
அதேசமயம் பொதுமக்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வு சரியான அளவில் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் முழு ஊரடங்கு போடப்பட்டும் பொதுமக்கள் ஏதோ சாதாரண நாளில் வெளியில் சுற்றுவது போல திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த கொரோனா தொற்றை தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய்க்கும் உயிரிழப்பு ஏற்படத் தொடங்கி இருக்கிறது. இது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.நாட்டின் பல மாநிலங்களில் இந்த கருப்பு பூஞ்சை தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. கொரோனாவில் இருந்து நலம் பெற்றவர்கள் இந்த நோய் பாதிப்பு காரணமாக, அதிகமாக பாதிப்படைகிறார்கள். எனவே இந்த நோயை தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், வேலூரை சேர்ந்த முருகானந்தம் என்பவர் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிப்படைந்து பலியாகி இருக்கிறார். சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருக்கிறார். இந்த நிலையில், அவருக்கு மறுபடியும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கருப்பு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது அவருடைய இடது கண் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலன் இல்லாமல் உயிர் இழந்து விட்டார் என்று சொல்லப்படுகிறது.