கொரோனா தொற்று! அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு!

0
122

நோய் தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்காக அரசு ஊழியர்கள் ஒரு நாள் ஊதியம் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இந்த நோய்த்தொற்று தடுப்பு பணிகளுக்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க சிறுவர்கள் முதல் பெரிய பெரிய தொழிலதிபர்கள் வரை தங்களால் இயன்ற பணத்தை கொடுத்து வருகிறார்கள். அந்த விதத்தில் அரசு ஊழியர்கள் தங்களுடைய ஒருநாள் ஊதியத்தை நோய்த்தொற்று நிவாரண நிதிக்கு வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.

நோய்தொற்று பாதிப்பில் இருந்து தமிழக மக்களை பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தரும் விதத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், ஆசிரிய பெருமக்கள் உள்ளிட்டோர் ஒரு ஒரு நாளைய ஊதியத்தை வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள் என்று தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு அதனை பரிசீலனை செய்து அதை ஏற்றுக்கொள்ள அரசு முடிவு செய்து இருக்கிறது. அதன் வழியாக நோய்த்தொற்று பரவல் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைக்காக அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், ஆசிரிய பெருமக்கள், உள்ளிட்டோர் அவர்களுடைய ஒரு நாள் ஊதியம் அல்லது அதற்கு மேற்பட்ட தினங்களுக்கு ஊதியத்தை அவர்களுடைய சொந்த விருப்பத்தின் பெயரில் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றி மே மாதம் அல்லது ஜூன் 2021 ஆம் ஆண்டிற்கான ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதற்கு அனுமதி தந்து தமிழக அரசு ஆணையிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களுடைய ஒருநாள் அல்லது அதற்கு மேலான தினங்களுக்கு ஊதியத்தை வழங்குவதற்கு விருப்பம் கொள்ளும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், ஆசிரியர் பெருமக்கள், போன்றோர் அதற்கான தங்களுடைய விருப்பத்தை சம்பந்தப்பட்ட சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் எழுத்துப்பூர்வமாக வழங்கவேண்டும். பிடித்தம் மேற்கொள்ளப்படும் மாதத்திற்கு உரிய நிகர ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் கணக்கிடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி ஒருங்கிணைந்த நீதி மற்றும் மனித வள மேலாண்மை முறையில் இருக்கின்ற வழிமுறைகளை பயன்படுத்தி பணியாளர்களின் ஒருநாள் அல்லது அதற்கு மேற்பட்ட தினங்களுக்கு ஆன உதயத்தை பெற்று வழங்கும் அலுவலர் கணக்கிட்டுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Previous articleவிரிவான அறிக்கை கேட்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்!
Next articleஅமைச்சர் வெளியிட்ட நற்செய்தி! விவசாயிகள் மகிழ்ச்சி!