ஓ என் வி விருதை திருப்பி அளிப்பதாக கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!

0
202

வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்ற ஓ.என்.வி இலக்கிய விருதிற்கு நடிகை பார்வதி மற்றும் சின்மயி உள்ளிட்டோரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து விருதுகள் குழுவின் பரிந்துரைகளின் படி இந்த வருடத்திற்கு வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டிருக்கும் ஓ என் வி இலக்கிய விருது தொடர்பாக மறு பரிசீலனை செய்வதற்கு முடிவு செய்து இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓ என் வி விருதை திருப்பி கொடுப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்திருக்கிறார். விருதுக்கான பரிசுத் தொகை 3 லட்சத்தை கேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுப்பதாகவும், காழ்புணர்ச்சி உடைய ஒரு சிலரின் குறுக்கீடு காரணமாக, விருது மறுபரிசீலனை என்று அழைக்கப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார்.

Previous articleயுவன் சங்கர் ராஜாவின் ரகசியங்களை உடைத்த மனைவி!
Next articleஅடடே அவரா இவர்? அசந்துபோன ரசிகர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here