ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் லட்சுமி ராமகிருஷ்ணன் இவர் அனேக திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார் இவர் இயக்குனராகவும் உருவெடுத்தவர்.
ஆனாலும் இத்துணை பன்முகத் தன்மையை கொண்டவராக இருந்தாலும் கூட அவருக்கு இந்த சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சிதான் பிரபலத்தை கொடுத்தது. இவருடைய விவாதங்கள் மீம்ஸ் தயாரிப்பாளர்களுக்கு விருந்தாகவே அமைந்துவிட்டது. கடந்த ஆண்டு ஊரடங்கின்போது நடிகை வனிதாவின் திருமணத்தில் தலையிட்டு பலவாறாக கிண்டலுக்கு ஆளானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அதன் பிறகு கூட லட்சுமி ராமகிருஷ்ணன் அவ்வப்போது ஏதாவது ஒரு முக்கிய விஷயங்களில் குரல் கொடுத்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.
அண்மையில் தமிழ்நாட்டை முறுக்கிய பி எஸ் பி பி பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புகாரை அடுத்து தொடர்ச்சியாக அனேக பிரச்சனைகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய சமுதாயத்தை சார்ந்தவராக இருந்தாலும் கூட பெண்கள் விவகாரம் என்று வந்துவிட்டால் எல்லை மீறி சென்றால் அவர்களது உறுப்பை அறுக்க வேண்டும். இது எனக்கும் நடந்திருக்கிறது என்னுடைய சகோதரிகளுக்கும் நடந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.