இந்த ராசிகாரர்களுக்கு பணவரவு உண்டு! இன்றைய ராசி பலன்கள்

0
198
Today's zodiac benefits
Today's zodiac benefits

இந்த ராசிகாரர்களுக்கு பணவரவு உண்டு! இன்றைய ராசி பலன்கள்

மேஷ ராசி:

     உங்களின் உழைப்பு சிறப்பானதாக இருக்கும்.எந்த செயல் செய்தாலும், மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் செய்வீர்கள்.அதன் மூலம் நன்மை விளையும்.உறவு நட்பானதாக இருக்கும்.பண வரவு திருப்தி தரும்.

ரிஷப ராசி:

     செயல் திறனை மேம்படுத்துவதன் மூலம் வெற்றி அடைய முடியும்.பனியின் காரணமாக பயணம் ஏற்படலாம்.உங்கள் பணியில் மாற்றங்கள் ஏற்படும்.பெற்றோர்களுடன் பொறுமையாக பேசுங்கள்.பண வரவு ஓரளவு ஏற்படும்.

மிதுன ராசி:

     இன்று எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.அதிக வேலைப்பளு இருக்கும்.பொறுமையாக இருக்க வேண்டும்.யாரிடமும் பேசும் முன் யோசித்து பேசவும்.செலவுகளை கட்டுபடுத்தவும்.

கடக ராசி:

     இன்று உங்களுக்கு சாதகமான நாள்.நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள்.தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.குடும்பத்தில் அமைதி நிலவும்.பண வரவு சிறப்பாக இருக்கும்.

சிம்ம ராசி:

     முயற்சியின் மூலம் வெற்றி கிடைக்கும் நாள்.பயணங்கள் ஏற்படும்.பணியிட சூழல் திருப்தியாக இருக்கும்.இன்று மகிழ்ச்சி நிலவும் நாள்.பணவரவு அதிகமாக இருக்கும்.

கன்னி ராசி:

     இன்று உங்களது நோக்கம் நிறைவேறும்.அதனால் நற்பலன்கள் ஏற்படும்.உங்களின் திறமைகளை வெளிக்காட்ட வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கும்.பங்குகளில் முதலீடு செய்யலாம்.

துலாம் ராசி:

     இன்று உங்களுக்கு துடிப்பான நாளாக இருக்கும்.உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.உங்கள் திறமை அனைவராலும் அறியப்படும்.ஓரளவிற்கு பண வரவு இருக்கும்.

விருச்சிக ராசி:

     இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.உங்கள் நலனிற்காக முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.பணி சீராக நடைப்பெறும்.எளிதாகவும் இருக்கும்.வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.பண வரவு சிறப்பாக இருக்கும்.

தனுசு ராசி:

     உங்கள் செயல்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.நீங்கள் செய்யும் செயல்களுக்கு உடனடி பலன்கள் கிடைக்காது.பணிச்சுமை அதிகமாக இருக்கும்.பேச்சில் கவனம் தேவை.பணவரவு குறைந்து இருக்கும்.

மகர ராசி:

     இன்று சுமாரான நாளாக இருக்கும்.தொழிலில் சிறப்பாக முன்னேற்றம் இருக்கும்.அதிக லாபாம் கிடைக்கும்.வேலை செய்பவருக்கு அங்கீகாரம் கிடைக்கும்.குடும்ப உறவில் மகிழ்ச்சி இருக்கும்.

கும்ப ராசி:

     முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.இன்று வேலை அதிகமாக இருக்கும்.நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.குடும்பத்தில் பொறுமையாக பேச வேண்டும்.செலவுகள் அதிகமாக இருக்கும்.

மீன ராசி:

     இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும்.உங்கள் வீட்டில் நடக்கும் விசயங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள்.பண வரவு அதிகமாக இருக்கும்.மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

Previous articleமேடம்! பட்டன் போட மறந்துட்டீங்க! ரைசா ஃபோட்டோ உள்ளே!
Next articleமக்களுக்காக தான் அரசு என்பதை ஸ்டாலின் நிரூபித்திருக்கிறார்! வைகோ பாராட்டு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here