விஷ்ணு விஷால் திரைப்படம் ஓடிடியில் வெளியிடா?

0
216

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்து வரும் திரைப்படம் எஃப்ஐஆர் கௌதம் மேனன், நாராயணன் மஞ்சிமா மோகன், மோனிகா, ஜான் ராபின்சன் போன்ற பலர் நடித்திருக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதியுடன் ஒட்டுமொத்தமாக அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், இறுதிக்கட்ட வேலைகளில் கவனம் செலுத்துகின்றது. இந்த படத்தின் ஒரு திரைப்படத்தை வெளியிடுவதற்கு தயாராக இருப்பதாக தெரியவந்திருக்கிறது. இதன் டீசருக்கு இணையதளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக, படக்குழுவினர் எந்த ஒரு விளம்பரமும் செய்யாமல் அமைதியாக இருந்து வருகிறார்கள்.

இதற்கு இடையே எஃப்ஐஆர் திரைப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இவை ஹாட்ஸ்டார் ஓடிடி தலம் கைப்பற்றி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனாலும் படக்குழுவினர் எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவலும் தெரிவிக்கவில்லை. விஷ்ணு விஷால் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மோகன்தாஸ் படத்தை தயாரித்து நடிக்க இருக்கிறார்.

Previous articleஅஸ்க்கு மாரோ பாடல் படைத்த புதிய சாதனை! ரசிகர்கள் கொண்டாட்டம்!
Next article“ஹிட்லரின் கழிப்பறை சாவி” எவ்வளவிற்கு ஏலம் போனது தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here