தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர்! கட்டம் கட்டும் காவல்துறை!

0
106

நாடோடிகள் திரைப்படத்தில் நடித்த தமிழ் நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் தன்னுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து அதன் பிறகு திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருவதாக காவல்துறையில் புகார் அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடித்த நாடோடிகள் திரைப்படத்தில் ஒரு பணக்கார வீட்டு பெண்ணாக நடித்திருந்தார் துணை நடிகை சாந்தினி பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். ஆனாலும் அவர் சரியாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார் திடீரென்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்து புகாரின்படி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர் அளித்த புகாரில் முன்னாள் அமைச்சரான மணிகண்டன் ஐந்து வருடங்களாக திருமணம் செய்யாமல் தங்களுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்திருக்கிறார். ஆனால் திருமணம் தொடர்பாக பேச்சை எடுத்தால் தன்னை கொலை செய்து விடுவதாகவும் தன்னுடைய ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆகவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது கொடுத்த புகாரின் பேரில் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பாலியல் வன்கொடுமைகள் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நடிகை சாந்தினி அளித்த புகாரில் கைது செய்யப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாகி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நடிகை சாந்தினி கொடுத்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்களை ஒன்றுதிரட்ட தனிப்படை காவல்துறையினர் ராமநாதபுரம் விரைந்திருக்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் சாந்தினி கருக்கலைப்பு செய்த மருத்துவமனை விசாரணை வளையத்தில் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதோடு மணிகண்டனின் கார் ஓட்டுநர் அவர் அமைச்சராக இருந்த சமயத்தில் அவருடன் பணிபுரிந்த பாதுகாப்பு அதிகாரிகள் குறித்து அவரிடம் விசாரணை நடத்துவதற்கு காவல்துறை தரப்பு தயாராகி வருவதாக சொல்கிறார்கள். அதோடு மணிகண்டனின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் உதவியால் அவர்களிடமும் விசாரணை செய்ய காவல்துறையினர் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

Previous articleகோயமுத்தூர் மாவட்டத்தில் புதிய உத்தரவைப் பிறப்பித்த தமிழக அரசு!
Next articleஇணையத்தில் வெளியாக தயாராகும் திரைப்படங்கள்!