கோலிவுட் வட்டாரத்தில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் அஜித்குமார். இவருடைய நடிப்பில் வெளிவந்த திரை படங்கள் எல்லாமே ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்து வசூலில் சாதனை படைத்திருக்கிறது.
மற்ற நடிகர்களை போல இல்லாமல் தன்னம்பிக்கை ஏற்படும் திரைப்படங்களில் மட்டுமே அஜித்குமார் நடித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. கடைசியாக இவருடைய நடிப்பில் கடைசியா வெளியான படம் நேர்கொண்ட பார்வை இந்த திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை பதிவு செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு குடும்பங்களுடன் ஒன்றிணைந்து ரசிக்கும் ரசிகர்கள் மட்டும் திருப்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது.
அத்துடன் நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் எந்தவிதமான பெரிய அளவிலான சண்டை காட்சிகளும் இல்லை என்று சொல்லப்படுகிறது. தற்சமயம் அஜித் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தொடர்பான தகவல் இதுவரையில் வெளியாகாமல் இருந்து வருகிறது ஆகவே விரைவாக இதுதொடர்பான தகவலை வெளியிட வேண்டும் என்று அஜித் குமார் அவர்களின் ரசிகர்கள் அவருக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஹீமா நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திக்கேயா நடித்து வருகிறார் எனவும் இந்த சூழ்நிலையில் நடிகர் அஜித் வலிமை திரைப்படத்திற்காக 10 முதல் 15 கிலோ வரை எடையைக் குறைத்து விட்டார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நேர்கொண்டபார்வை இத்திரைப்படத்தில் அதிரடி காட்சிகளை மிகவும் மிஸ் செய்த ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாகவே இருக்கும் என்று இந்த திரைப்படத்தின் தகவல் முதல் முறையாக வெளியிடப்பட்டு இருக்கிறது.