தொடர்ந்து அதிகரித்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை! தலையில் கைவைத்த வாகன ஓட்டிகள்!

0
251

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

பொதுத்துறை நிறுவனங்களாக இருந்து வரும் இந்தியன் ஆயில் பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுதுறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறையை பின்பற்றி வருகின்றன. நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் தேதி முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது.

இந்த சூழ்நிலையில், இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று அதிகரித்து இருக்கிறது. அதன்படி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 24 காசுகள் உயர்ந்து 96 ரூபாய்71 ஒரு காசுக்கும், டீசல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 90.92 காசுக்கு விற்பனை ஆகி வருகின்றது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்திருக்கிறது

Previous articleஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரி மரணம்!
Next article3 விநாடிகள் அல்ல! 3 மில்லி வினாடிகளில் காதலில் விழுந்தேன்! ராஷ்மிகா பகீர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here