கோவேக்சினை விட கொவிஷீல்டில் நோயெதிர்ப்பு திறன் அதிகம்! ஆய்வின் மூலம் கண்டுபிடிப்பு!

0
129
CoviShield has more immunity than covex! Discovery through research!
CoviShield has more immunity than covex! Discovery through research!

கோவேக்சினை விட கொவிஷீல்டில் நோயெதிர்ப்பு திறன் அதிகம்! ஆய்வின் மூலம் கண்டுபிடிப்பு!

இந்தியாவில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கோவேக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் செயல்திறன் 81 சதவீதம் ஆகும்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனேகா கூட்டு கண்டுபிடிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் செயல்திறன் 70 சதவீதம்.

இந்தநிலையில், எந்த தடுப்பூசியால், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் பொருள் (ஆன்டிபாடி) அதிகமாக உற்பத்தி ஆகிறது என்பது பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள விஜய்ரத்னா டயாபடீஸ் சென்டர், கொல்கத்தாவில் உள்ள ஜி.டி. ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

13 மாநிலங்களின் 22 நகரங்களை சேர்ந்த 515 சுகாதார பணியாளர்களை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில் 210 போ் பெண்கள். 425 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி 2 தவணையும், 90 பேர் கோவேக்சின் தடுப்பூசி 2 தவணையும் போட்டுக்கொண்டனர்.

நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கணக்கிட அவர்களது ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், கோவிஷீல்டு போட்டுக்கொண்டவர்களில் நோய் எதிர்ப்பு சக்தி அளவு, மி.லி.க்கு 127 ஏ.யு. என்ற அளவிலும், கோவேக்சின் போட்டுக்கொண்டவர்களில் நோய் எதிர்ப்பு சக்தி அளவு, மி.லி.க்கு 53 ஏ.யு. என்ற அளவிலும் இருந்தன.

மேலும், நோய் எதிர்ப்பு சக்தி உற்பத்தி விகிதம் கோவிஷீல்டு தடுப்பூசியில் 98.1 சதவீதமும், கோவேக்சின் தடுப்பூசியில் 80 சதவீதமும் காணப்பட்டது. 60 வயதை தாண்டியவர்களை விட 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த விகிதம் அதிகமாக இருந்தது. டைப் 2 நீரிழிவு நோய் இருப்பவர்களிடம் குறைவாக இருந்தது.

முதல் தவணை தடுப்பூசி போடுவதற்கு 6 வாரங்களுக்கு முன்பு கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மற்றவர்களை விட 100 சதவீத நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருந்தது.

பொது மக்கள் தடுப்பூசிக்கு பயந்த நிலையில் இது போன்ற அறிவிப்புகள் மக்கள் மனதில் கொஞ்சம் தைரியத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது மக்களும் தடுப்பூசி போட முன் வருகின்றனர்.

18 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சிறு வயதுடையோருக்கு கோவிஷீல்டு இரண்டாம் டோஸாக மட்டுமே போட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது தட்டுப்பாட்டினால் இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி நேரலையில் பேசினார். அப்போது மாநிலங்கள் அனைத்திற்கும் இலவச தடுப்பூசி தரப்படும் எனவும் கூறினார்.

Previous articleசென்னையில் அனைத்து சிக்னலும் இன்று முதல் இயங்கும்! காவல்துறை அறிவிப்பு!
Next articleஅமைச்சர் சேகர்பாபு கிட்ட பேசுறியா? போலீசாரை மிரட்டிய நபருக்கு நேர்ந்த கதி