வாகன ஓட்டிகளை கதறவிடும் பெட்ரோல் டீசல் விலை!

0
261

இந்தியாவை பொறுத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களாக இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. நோய் பரவல் அதிகமாக இருந்ததன் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் இறுதி வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மாறுதல் ஏதும் ஏற்படாமல் இருந்தது. இந்த நிலையில், ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்த சூழ்நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து இருப்பதாக தெரிகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து 97 ரூபாய் 19 காசுக்கும் டீசல் ஒரு லிட்டருக்கு 27 காசுகள் உயர்ந்து 96 ரூபாய் 42 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்து இருப்பதாக தெரிகின்றது.

Previous article“யூனிபார்மை கழட்டிடுவேன்” சண்டை போட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!
Next articleநோய்தொற்று நிவாரண நிதி! 2000 ரூபாய் இரண்டாவது தவணைக்கான டோக்கன் இன்று முதல் வினியோகம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here