சதத்தை நெருங்கும் பெட்ரோல் டீசல் விலை!

0
255

இந்தியாவைப் பொறுத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் நிலைமை வரும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

சில காலத்திற்கு முன்பு வரையில் இந்த பெட்ரோல் டீசல் விலையை மாதம் ஒருமுறை நிர்ணயம் செய்யும் நடைமுறை இருந்து வந்தது. ஆனால் இதனை மாற்றி நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை மத்திய அரசு அறிவித்தது.

அதன்படியே இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்தநிலையில், நோய்த்தொற்று பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால் ஜூன் முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகின்றன.

அந்த வகையில், இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்திருக்கிறது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 24 காசுகள் உயர்ந்து 97 ரூபாய் 43 காசுக்கும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து 96 ரூபாய் 64 காசுக்கும், விற்பனையாகி வருகிறது

Previous articleபிசாசு 2 படத்தில் நிர்வாணமாக நடித்து உள்ளாரா? ஆண்ட்ரியா?
Next articleகைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி! கடும் சீற்றத்தில் சீமான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here