ரொனால்டோ கூறிய ஒற்றை வார்த்தை! பல கோடி நஷ்டமடைந்த அந்த நிறுவனம்!
யூரோ 2020 கால்பந்து தொடர் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகள் பங்கேற்றுள்ள நிலையில், யூரோ கால்பந்து தொடரின் போர்ச்சுகல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் போர்ச்சுகல் அணியின் சிறப்பு நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்றார்.
அப்போது அங்கு வந்த ரொனால்டோ தனக்கான இருக்கையில் அமர்ந்ததும் கோக கோலா குளிர்பானங்களை எடுத்து மேசையின் அருகே கீழே வைத்துவிட்டு செய்தியாளர்களை பார்த்து தண்ணீர் பாட்டிலை காட்டி தண்ணீர் அருந்துங்கள் என கூறியுள்ளார்.
செய்தியாளர்களின் சந்திப்பில் யாரும் எதிர்பாராமல் செய்தது உலக அளவில் பேச்சு பொருளாக மாறி உள்ளது.இந்த சம்பவத்தினால் அந்த குளிர்பான நிறுவனத்தின் சந்தை மதிப்பு உடனே குறைந்து விட்டது. அதுவும் 4 மில்லியன் அமெரிக்கன் டாலர்களாம்.
அதாவது இந்திய மதிப்பில், சுமார் 29 ஆயிரம் கோடி ருபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
மேலும் அந்த நிறுவனம் நம் நாட்டில் இருக்கும் போது என்னவெல்லாம் நடந்தது என நாம் அனைவருக்கும் நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனாலும் அதன் தாக்கம் இன்னும் சில பேருக்கு இருக்கிறது.
அவர்கள் எல்லாம் இந்த செய்தியை பாருங்கள். நட்சத்திர அந்தஸ்து இருக்கும் ஒருவர் எது செய்தலும் நாமும் அதை செய்ய வேண்டும் என அவசியம் இல்லை.
நமது இந்த எண்ணத்தை பயன்படுத்திதான் இந்த மாதிரி வெளி நாட்டு நிறுவனங்கள் தேவை இல்லாத அல்லது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் அனைத்தையும் விளம்பரங்கள் மூலம் நம் தலையில் கட்டி விடுகின்றன.