வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய இருக்கும் பகுதிகள்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
176

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் கன்னியாகுமரி, சேலம், ஈரோடு கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், நாளையதினம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற கோவை நீலகிரி திருப்பூர் திண்டுக்கல் தேனி தென்காசி போன்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், நாளை மறுநாள் மற்றும் 20ஆம் தேதி ஆகிய தினங்களில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றி இருக்கின்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக, லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Previous articleதி.மு.க.வினர் கொலை மிரட்டல்! துணை நடிகை பரபரப்பு புகார்!
Next articleICICI வங்கியில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு! கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here