ராகுல் மற்றும் சோனியாவை இன்று சந்திக்கிறார் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின்!

0
213

ராகுல் மற்றும் சோனியாவை இன்று சந்திக்கிறார் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின்!

நேற்றைய தினம் டெல்லிக்குச் சென்ற இருக்கின்றன தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் என்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேச இருக்கிறார் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் ஒரு பெற்றுக்கொண்ட பின்னர் முதல்முறையாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இருக்கின்றார். முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கின்றார். அதன் பிறகு 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் 25 கோரிக்கைகளை தமிழக அரசின் நலன் கருதி முன்வைத்தார் ஸ்டாலின் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும், மேகதாது அணை திட்டத்திற்கு கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்ய வேண்டும், அதோடு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகளை தொடங்க வேண்டும், அதேபோல நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருக்கின்ற 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்திருக்கின்றார்.அப்போது முதல்வருடன் அமைச்சர் துரைமுருகன் போன்றோர் உடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இன்று சந்தித்து பேசியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று சொல்லப்படுகிறது. ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக டெல்லி சென்று இருக்கின்றார். அவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை அவர் இன்றையதினம் சந்திக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல டெல்லியில் இருக்கின்ற பழைய தமிழ்நாடு இல்லத்தை இன்று பார்வையிடுகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் காவடியா பார்க் பகுதியில் இருக்கின்ற வைகை இல்லம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட இருப்பதால் அதையும் பார்வையிட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக அரசின் வழக்கறிஞர்களுக்கான அரை அதேபோல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அறை நூலகம் பழைய தமிழ்நாடு இல்லத்தில் தான் செயல் பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleதமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை
Next articleசற்று முன்: சரசரவென குறைந்த தங்கத்தின் விலை! சீக்கிரம் வாங்கி வெச்சுக்கோங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here