சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன.
இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் செயல்பட்டு வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை பின்பற்றி வருகின்றார்கள். நோய்த்தொற்று காரணமாக, மார்ச் மாதம் இறுதி முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் டீசல் விலைகள் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது.
ஆனால் ஜூன் மாதம் முதல் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் பிறை கட்டுப்படுத்தப்படும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தது. இருந்தாலும்.இது தொடர்பாக தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 98 ரூபாய் 40 காசுக்கும், ஒரு லிட்டர் டீசல் 92 ரூபாய் 58 காசுக்கும் விற்பனையாகி வருகிறது.