வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை! சென்னை வாசிகளே உஷார்!

0
186

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற தென்காசி, தேனி, திருப்பூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களிலும் சென்னை, புதுச்சேரி போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதோடு மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் உள்ளிட்டவற்றால் நாளை மறுநாள் கோவை மற்றும் நீலகிரி, திண்டுக்கல், மதுரை, சிவகாசி, புதுக்கோட்டை ,தேனி, திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, போன்ற மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், மற்ற மாவட்டங்களில் புதுச்சேரி, காரைக்கால், போன்ற இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், போன்ற ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

வரும் 23ஆம் தேதி கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேபோல மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்குமென்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.

Previous articleதமிழ் மொழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை – ஆளுநர் அறிவிப்பு!
Next article“அவனுக்கு பேய் பிடித்து இருக்கு” 7 வயது சிறுவன் பரிதாபம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here